தர்மபுரி: அரூர் அருகே உள்ள நெருப்பாண்டகுப்பம் கிராமத்தில் 500 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில் இதுவரை ஒருவருக்கு கூட கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கு கிராமத்தின் காவல் தெய்வம் ஸ்ரீ முத்துமாரி அம்மன்தான் காரணம் என்று உள்ளூர் வாசிகள் நம்புகின்றனர். இதனால் கரோனா தொற்றிலிருந்து தங்களை காத்த அம்மனுக்கு 101 குடம் அபிசேகம் செய்து வழிபட்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி கூத்தும் குதூகலமுமாய் கூல் ஊற்றி கொண்டாடியுள்ளனர். அப்போது சமூக இடைவெளி, முக கவசம் போன்ற கரோனா முன்னெச்சரிக்கை விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டு ஊர்வலமாய் ஊர் சுற்றி வந்துள்ளனர்.
ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி ஊர் கூடி கூழ் ஊற்றிய இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழ்நாடு அரசு ஊரடங்கு விதித்த போது அதை கிராமத்தினர் முறையாக கடைப்பிடித்துள்ளனர். உள்ளூரிலிருந்து வெளியூருக்கும் செல்லவில்லை. வெளியூர்காரர்களை உள்ளூரிலும் அனுமதிக்கவில்லை.
கண்ணுக்கு தெரியாத கரோனாவும் கடவுளும் ஒருபோதும் நமக்கு உதவ மாட்டார்கள் என்பது கரோனா தாக்கம் ஏற்படுத்திய நீங்கா வடு என்பதை அறியாத மக்கள, முன்பெல்லாம் ஊரடங்கை முறையாக கடைப்பிடித்து விட்டு தற்போது காரியம் கைகூடி வரும் நேரத்தில் மூடநம்பிக்கையால் கட்டுப்பாடுகளை மீறியுள்ளனர்.
இதையும் படிங்க; 'வடலூர் சத்திய ஞான சபையின் சர்வதேச மையம் விரைவில்' - அமைச்சர் சேகர்பாபு