ETV Bharat / state

கரோனா நோயாளிகளுக்கான மனநல ஆலோசனை: தொலைபேசி எண்கள் அறிவிப்பு!

தருமபுரி மாவட்டத்தில் கரோனா நோயாளிகளுக்கான மனநல ஆலோசனை பெற தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கரோனா நோயாளிகளுக்கான மனநல ஆலோசனை
author img

By

Published : Jun 13, 2021, 2:44 AM IST

தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் கரோனா தொற்று அதிகளவில் பரவி வருகிறது. இதனால், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களுக்கும் மீண்டும் உடல், மனரீதியாக பழைய இயல்பு நிலைக்கு திரும்ப இயலாத நிலை ஏற்படுகிறது.

இந்நிலையில், பெங்களூருவில் செயல்பட்டு வரும் தேசிய மனநலம், நரம்பியல் நிறுவனமும் (NIMHANS) ஒன்றிய அரசின் சுகாதாரம், குடும்பநலத்துறை ஆலோசனைகள் இணைந்து அவர்களுக்கு மனநலம், உளவியல் ரீதியான (Psychosocial Support) தொலைபேசி சேவை (Help-line) வழியாக தமிழ் மொழி உள்பட 12 பிராந்திய மொழிகளில் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்கள், அவர்களுடன் தொடர்பில் உள்ள குடும்ப உறுப்பினர்கள், நோய் அறிகுறிகளின்றி கரோனாத் தொற்று உள்ளவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டவர்களும் 80-46110007 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு மனநலம், உளவியல் ரீதியான ஆலோசனைகளை பெற்று பயன்பெறுமாறு தருமபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: குறைந்துவரும் கொரோனா தொற்று; 27ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நலம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.