தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் தேசிய அளவிலான கிளி மூக்கு வால் சேவல் கண்காட்சி நடைபெற்றது. இந்தக் கண்காட்சியில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பல நிறங்களில் வெள்ளை, காகம் பூதி நூலான், கீரி, பொன் நிற ரக சேவல்கள் என 500க்கும் மேற்பட்ட சேவல்கள் கண்காட்சிக்கு கொண்டுவரப்பட்டன.
இதில் சேவல்களின் அழகு, கொண்டை, கழுத்து, முக அமைப்பு, கண், உயரம், வால் அமைப்பு ஆகியவற்றைக் கொண்டு முதல் பரிசாக தங்க நாணயத்தையும் இரண்டாம் பரிசாக வெள்ளி நாணயமும் வழங்கப்பட்டன. இந்த சேவல் கண்காட்சியில் சென்னையைச் சேர்ந்த சேவல் முதல் பரிசை வென்றது.
தருமபுரி மாவட்டத்தில் சேவல் கண்காட்சி முதல்முறையாக நடைபெறுவதால் தருமபுரி மாவட்ட மக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர். மேலும் இந்தக் கண்காட்சியில் 6 ஆயிரம் முதல் 6 இலட்சம் ரூபாய் வரையிலான மதிப்பு கொண்ட சேவல்கள் இடம்பெற்றன.
இதையும் படிங்க: பொங்கலுக்கு 29,213 பேருந்துகள் ஏற்பாடு - அமைச்சர் தகவல்!