தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் நடைபெற்ற அரசு விழாவில் 931 பயனாளிகளுக்கு பொங்கல் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் தமிழ்நாடு உயர் கலவித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இதையடுத்து மக்களிடையே பேசிய அவர்,
இந்தியாவில் 18 மாநிலங்களில் நிர்வாகத் திறன் மிகுந்த மாநிலமாக மத்திய அரசு தமிழகத்தை தேர்வு செய்து சான்றிதழ் வழங்கியுள்ளது. தமிழக அரசு தொலைநோக்கு பார்வையோடு குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கி வருகிறது. தமிழகத்தில் 2 கோடியே 5 லட்சத்து 25 ஆயிரத்து 337 குடும்ப அட்டைதாரர்களுக்கு 2363 கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், தருமபுரி மாவட்டத்தில் உள்ள நான்கு லட்சத்து 24 ஆயிரத்து 971 குடும்ப அட்டைதாரர்களுக்கு 48 கோடியே 92 லட்சத்து 90 ஆயிரத்து முன்னூற்று அறுபது ரூபாய் மதிப்பிலான சிறப்பு பொங்கல் தொகுப்பு வழங்கப்படவுள்ளது. அதில் தற்போது, அதியமான் கோட்டை பகுதியில் உள்ள 931 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், தமிழ்நாடு அரசு திருமண நிதி உதவி திட்டம், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 14 வகையான பொருட்கள் வழங்கும் திட்டம், உழைக்கும் மக்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம், விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கும் திட்டங்களை தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது எனவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க:2021இல் எல்லாம் மாறும் - ஸ்டாலின் நம்பிக்கை