தூத்துக்குடி: தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்தார்.
இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்: அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், “இலங்கையில் தமிழர்களை சுட்டு கொன்றார்கள். வலைகளை கிழித்து எறிந்தார்கள். இதற்கு மேல் என்ன நடவடிக்கை எடுக்க போகின்றார்கள். இதற்கு மேல் என்ன நடவடிக்கை உள்ளது. தமிழ்நாட்டு மீனவர்கள் மட்டும்தான் எல்லை தாண்டி வருகிறார்களா? கேரள மீனவர்கள் வரவில்லையா? வெளியுறவுத்துறை அமைச்சர், பாதுகாப்பு துறை அமைச்சர், நாட்டின் பிரதமர், தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய பெருங்கடலில் மீன் பிடிப்பதற்கு உரிமை இல்லையா? ஒரு சின்ன நாடு இலங்கை. இலங்கை மீது பொருளாதார தடை செய்ய வேண்டும். கட்சத்தீவை மீட்க வேண்டும்” என்றார்.
திராவிடம் பேயரில் வசதியாக திருடலாம்: நாதக கொள்கை அங்கு பாதி இங்கு பாதி இல்லை. நதக கொள்கையில் கல்விகேற்ற வேலை, பொருளாதாரா வளர்ச்சி உண்டு. திராவிடமும், தமிழ் தேசியமும் ஒருபோதும் ஒன்றாகாது. கூட்டணி சேர்க்க வேண்டும் என நினைப்பவர்கள் இது போன்ற நினைக்கலாம். ஆனால் இது போர், நியபகம் இருக்கட்டும். வசதியாக திருட, ஒதுங்க தான் திராவிடம் என்ற கொள்கை உள்ளது. வேளாண் நில அளவைக்கு வேளாண் மாணவர்களை பயன்படுத்துவது தவறு. வெற்றி கழகத்தில் இருந்து 500க்கும் மேற்பட்டோர் நாம் தமிழர் கட்சியில் இணைய உள்ளதில் மகிழ்ச்சி” என்றார்.
இதையும் படிங்க: சட்டவிரோதமாக கட்டப்பட்ட வீடுகள்! ஜேசிபி வாகனங்கள் கொண்டு தரைமட்டம்!
மேலும் Youtuber இர்ப்பான் மகள் குறித்து வீடியோ வெளியிட்டதற்கு, திமுக இன்னும் அவர் மீது வழக்கு பதியவில்லை இது குறித்த கேள்விக்கு? இர்பான் திமுக ஆதரவாளர். அப்படி தான் இருக்கும். 2026 தேர்தல் கட்டமைப்பு நடக்கிறது. அனைத்து கட்சியும் என் பின்னால் ஓடி வருகிறார்கள்.
இந்த முறையும் நான் தனித்துதான் போட்டியிட இருக்கிறன். என் பயணம் என் கால்களை நம்பி தான் உள்ளது. என் கொள்கை யாரிடமும் ஒத்து போகவில்லை. மது, லஞ்சம், திராவிடம் ஒழித்தால் தான் ஒழியும். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஊழல் பட்டியல் ரெடி பண்ணுவோம். திமுகவும் அதை தான் சொல்லுது. குரங்கு அப்பம் பிச்ச கதை போல தான் உள்ளது” என்றார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்