ETV Bharat / entertainment

'புஷ்பா 2' டிரெய்லர் எப்போது?... அல்லு அர்ஜூன் வெளியிட்ட மாஸ் அப்டேட்! - PUSHPA 2 TRAILER

Pushpa 2 trailer: அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடித்துள்ள புஷ்பா 2 படத்தின் டிரெய்லர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

புஷ்பா 2 போஸ்டர்
புஷ்பா 2 போஸ்டர் (Credits - @alluarjun X Account)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Nov 11, 2024, 5:15 PM IST

ஹைதராபாத்: சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடித்து கடந்த 2021இல் வெளியான திரைப்படம் 'புஷ்பா'. இத்திரைப்படம் இந்திய அளவில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் சாதனை படைத்தது. இப்படத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. அதுமட்டுமின்றி புஷ்பா படத்திற்காக தேசிய விருது பெற்று இந்திய அளவில் பிரபலமடைந்தார்.

இந்நிலையில் புஷ்பா படத்தின் 2ஆம் பாகம் வரும் டிசம்பர் 5ஆம் தேதி வெளியாகிறது. இதில் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மாபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ’புஷ்பா 2’ திரைப்படம் உலகம் முழுவதும் 11,500 திரைகளில் வெளியாகிறது. இதன் மூலம் உலக அளவில் அதிக திரைகளில் வெளியான ஜவான் திரைப்பட சாதனையை ’புஷ்பா 2’ திரைப்படம் முறியடித்துள்ளது.

மேலும் புஷ்பா முதல் பாகத்தில் அல்லு அர்ஜுன், சமந்தா நடனமாடிய “ஊ சொல்றியா மாமா” பாடல் இந்திய அளவில் பிரபலமானது இந்நிலையில் இரண்டாம் பாகத்தில் நடிகை ஸ்ரீ லீலா நடனத்தில் kissik song உருவாகியுள்ளது. தெலுங்கு சினிமாவில் சமீபத்தில் குத்து பாடலுக்கு பெயர் பெற்ற ஸ்ரீலீலா, புஷ்பா 2 பாகத்தில் பாடலுக்கு நடனமாடியுள்ளதை காண ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். அதேபோல் புஷ்பா 2 படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத்தும், தமனும் இணைந்து இசையமைத்துள்ளனர்.

இதையும் படிங்க: ’வேட்டையன்’ வசூல் சாதனையை முறியடித்த ’அமரன்’... பாக்ஸ் ஆபிஸில் சம்பவம் செய்யும் சிவகார்த்திகேயன்!

இந்நிலையில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த புஷ்பா 2 படத்தின் டிரெய்லர் வரும் நவம்பர் 17ஆம் தேதி மாலை 6.03 மணிக்கு வெளியாகிறது. புஷ்பா 2 டிரெய்லர் பாட்னாவில் வெளியிடப்படுகிறது என அல்லு அர்ஜூன் தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.