ETV Bharat / state

விபத்து ஏற்படும் சாலைகளை நேரில் ஆய்வு செய்த காவல் கண்காணிப்பாளர் - தருமபுரி மாவட்ட செய்திகள்

தருமபுரி: தொப்பூர் பகுதியில் விபத்து ஏற்படும் சாலைகளை காவல் கண்காணிப்பாளர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

காவல் கண்காணிப்பாளர்
காவல் கண்காணிப்பாளர்
author img

By

Published : Nov 4, 2020, 6:17 PM IST

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் இன்று(நவ.4) மாவட்ட தொப்பூர் பகுதி அருகே உள்ள சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தொடர் விபத்து ஏற்படும் பகுதிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அங்கு விபத்துகள் தொடர்ந்து ஏற்பட காரணம் என்ன? விபத்து ஏற்படாமல் இருக்க காவல் துறை எடுத்துள்ள நடவடிக்கை என்ன? என்பது குறித்து தொப்பூர் காவல் நிலைய, காவல் ஆய்வாளரிடம் கேட்டறிந்தார்.

இதனையடுத்து காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணாபுரம் மதிகோண்பாளையம், காரிமங்கலம், தருமபுரி அனைத்து மகளிர் நிலையம், நகர காவல் நிலையம், அதியமான் கோட்டை காவல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது காவல் நிலையங்களில் பராமரித்து வைக்கப்பட்டுள்ள கோப்புகள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களை பார்வையிட்டார்.

மேலும் பிரவேஷ் குமார் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பதவி ஏற்றதிலிருந்து வாகன விபத்துகளை குறைப்பது. குற்றவழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பது.

சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் குட்கா, கஞ்சா கடத்தல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபா்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.