தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மனோஜ் (22). கடந்த சில நாட்களுக்கு முன்பு மனோஜ் செல்போனை அவருடைய நண்பர் ஒருவர் வாங்கி ஆன்லைன் ரம்மி விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது செல்போனில் மனோஜ் வைத்திருந்த சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை அவரது நண்பர் பார்த்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நண்பர் இதுகுறித்து சிறுமிகளின் உறவினர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மனோஜின் செல்போனை பார்த்தபோது, 5 சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
விசாரணையில் அந்த 5 சிறுமிகளில் ஒரு சிறுமியிடம் அத்துமீறி பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
ஆனால் பாப்பிரெட்டிப்பட்டி காவல் துறையினர் பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் சம்பந்தப்பட்ட நிகழ்வு என்பதால் அரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் ஒரு சிறுமியை வன்புணர்வு செய்தது மருத்துவ பரிசோதனைக்கு பிறகு தெரிய வந்தது.
இதையடுத்து மனோஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து கைது செய்தனர். இதன் பிறகு தர்மபுரி மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட பிறகு மனோஜை சிறைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க:ஈரோடு சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு; இரண்டாவது தந்தை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்!