தருமபுரி: கடத்தூர் அருகே இளைஞரை கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, உறவினர்கள் 200க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.
தருமபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த அஸ்தகிரியூரை சேர்ந்த முனியப்பன் என்பவர் பொங்கலுக்கு முன் கடத்தூர் பேருந்து நிலையத்தில் கரும்பு விற்பனை செய்து வந்துள்ளார்.
அப்போது அந்த வழியாக வந்த கார் இவர் மீது உரசுவது போல சென்றுள்ளது. இதனை முனியப்பன் தட்டிக் கேட்டுள்ளார். அப்போது கார் ஓட்டி வந்த முத்தானூரை சேர்ந்த விவேகானந்தன் மற்றும் முருகன், ரகுபதி, விஜி ஆகியோர், முனியப்பயை காரில் ஏற்றிச் சென்று பலமாகத் தாக்கி உள்ளனர்.
இதனால் படுகாயமடைந்த முனியப்பன் உயிரிழந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த உறவினர்கள் கடத்தூர் காவல் நிலையத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்காததால், முனியப்பனின் மனைவி மற்றும் உறவினர்கள் 200க்கும் மேற்பட்டோர் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதையும் படிங்க: புவனகிரி அருகே விவசாயிகள் கொலை: ராணுவ வீரர்கள் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை!