தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மாரண்டஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன் (47). இவருக்கு சைலஜா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.
இன்று (ஏப்ரல்.17) மதியம் மோகன் குளிப்பதற்காக ஏரிக்கு சென்றார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக சேற்று பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கினார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு செனற தீயணைப்புத் துறையினர், மோகனின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: திருப்பூரில் ரவுடியை கத்தியால் குத்தி கொல்ல முயற்சி: சிசிடிவி வெளியீடு