ETV Bharat / state

ஒகேனக்கல்லில் 18 நாள்களுக்கு பிறகு பரிசல் இயக்க அனுமதி: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி - Dharmapuri District News

தருமபுரி: காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 8,500 கன அடியிலிருந்து 7,500 கன அடியாக குறைந்துள்ளதால், ஒகேனக்கலில் 18 நாள்களுக்கு பிறகு பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்துள்ளது.

படகு சாவரி
author img

By

Published : Nov 6, 2019, 8:26 AM IST

கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்துவந்ததால் கர்நாடக அணைகளில் கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகள் நிரம்பியுள்ளது. இந்த அணைகளிலிருந்து உபரிநீர் முழுவதும் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்துவந்ததால், காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி வரை வந்துகொண்டிருந்தது. தற்போது மழையளவு குறைந்ததால், காவிரி ஆற்றின் தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலுவுக்கு கடந்த சில தினங்களாக நீர்வரத்து படிப்படியாகக் குறைந்துவந்தது.

தொடர்ந்து இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 8,500 கன அடியிலிருந்து சரிந்து வினாடிக்கு 7,500 கன அடியாக குறைந்துள்ளது. இதனால் 18 நாள்களுக்கு பிறகு சின்னாறு, கோத்திக்கல், மணல்மேடு உள்ளிட்ட இடங்களில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்துள்ளது.

மேட்டூர் அணை நிரம்பியுள்ளதால் ஒகேனக்கல் ஐந்தருவி வரை தண்ணீர் தேங்கி நிற்பதால் பொம்மச்சிக்கல், மாமரத்துக்கடவு, ஜவர்பாணி, கர்நாடகா எல்லை உள்ளிட்ட இடங்களில் பரிசல் இயக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் அருவி பகுதியில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் பழுதடைந்துள்ளதால் அருவியில் குளிக்க 87ஆவது நாளாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.

படகு சாவரி

18 நாள்களுக்கு பிறகு பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியதால், சுற்றுலாப் பயணிகள், பரிசல் ஓட்டிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து காவிரி ஆற்றங்கரையோரம் வருவாய், ஊரக வளர்ச்சி, காவல் துறையினர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால், அணைக்கு வரும் நீர்வரத்தும் குறைந்தது. கபினியில் 583 கனஅடியும் கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து 6,141 கனஅடி என இரு அணைகளிலும் மொத்தம் 6,724 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:40 ஆயிரம் கனஅடி தண்ணீர் ஒகேனக்கல் வருகை!

Intro:ஒகேனக்கலில் பரிசல் இயக்க அனுமதிBody:தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதிConclusion: காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 8,500 கன அடியிலிருந்து 7,500 கன அடியாக குறைந்துள்ளதால், 18 நாட்களுக்கு பிறகு பரிசல் இயக்க அனுமதி-ஒகேனக்கல்லில் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு 87-வது நாளாக தடை  நீடிக்கிறது.

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால், கர்நாடக அணைகளில் கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பி உள்ளது. இந்த அணைகளில் இருந்து உபரி நீர் முழுவதும் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. 

 இந்நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு  பகுதியில் மழை குறைந்ததால், அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்தது. இந்நிலையில், கபினியில் 583 கன அடி, கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து 6,141 என, இரு அணைகளிலும் மொத்தம் 6,724 கன அடி தண்ணீர் காவேரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. 

 இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் காவேரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கன மழை பெய்து வந்ததால், காவேரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 40,000 கன அடி வரை வந்து கொண்டிருந்தது. தற்போது மழையளவு குறைந்ததால், காவேரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு கடந்த சில தினங்களாக  நீர்வரத்து படிப்படியாக குறைந்து வந்தது. தொடர்ந்து  இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து  வினாடிக்கு 8,500 கன அடியிலிருந்து சரிந்து வினாடிக்கு 7,500 கன அடியாக குறைந்துள்ளது. தொடர்ந்து ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில், பாதுகாப்பு அம்சங்கள் பழுதடைந்துள்ளதால், தொடர்நது சுற்றுலா பயணிகளுக்கு தொடர்ந்து 87-வது நாளாக ஒகேனக்கல்லில் தடை நீடிக்கிறது.

மேலும் கர்நாடகாவில் மழை அளவு குறைந்ததால், காவேரி ஆற்றில் நீர்திறப்பு தொடர்ந்து குறைக்கப்பட்டு வினாடிக்கு 6,724 கன அடியாக இருந்ததால், நீர்வரத்து தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இதனால் ஒகேனக்கல்லில் 18 நாட்களுக்கு பிறகு, சின்னாறு, கோத்திக்கல், மணல்மேடு வரை பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்துள்ளது. தொடர்ந்து மேட்டூர் அணை  நிரம்பியுள்ளதால், தண்ணீர் ஒகேனக்கல் ஐந்தருவி வரை தேங்கி நிற்பதால், பொம்மச்சிக்கல், மாமரத்துக்டவு, ஐவர் பானி, கர்நாடக எல்லை பகுதியில் பரிசல் இயக்க தடை தொடர்ந்து நீடித்து வருகிறது. ஒகேனக்கல்லில் 18 நாட்களுக்கு பிறகு பரிசல் இயக்க அனுமதி வழங்கியதால், சுற்றுலா பயணிகள் மற்றும் பரிசல் ஓட்டிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  தொடர்ந்து  ஒகேனக்கல்லில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் காவிரி  ஆற்றங்கரையோரம் மற்றும் ஒகேனக்கல்லில், வருவாய், ஊரக வளர்ச்சி மற்றும் காவல் துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.