ETV Bharat / state

ஊடங்கு ரத்து; ஒகேனக்கல் அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் - ஒகனேக்கலுக்கு அனுமதி

ஞாயிறு விடுமுறை நாளான (ஜன.30) இன்று ஒகேனக்கல் அருவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

ஒகேனக்கல்
ஒகேனக்கல்
author img

By

Published : Jan 30, 2022, 7:28 PM IST

தருமபுரி: ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தில் கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில் கரோனா பெருந்தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாகச் சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்குச் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதிக்கப்பட்டிருந்தது.

ஒகேனக்கலுக்கு அனுமதி

இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்று குறைய தொடங்கிய நிலையில் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்குச் சுற்றுலாப் பயணிகள் செல்லவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது.

ஒகேனக்கல் அருவியில் சுற்றுலாப் பயணிகள் வருகை

இந்நிலையில் ஞாயிறு தோறும் முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்ட நிலையில், (ஜன.30) ஞாயிற்றுக்கிழமையான இன்று சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் குவிந்தனர். சுற்றுலாப்பயணிகள் பரிசல் சவாரி செய்தும் மீன் சமையல் சுவைத்தும் மகிழ்ந்தனர்.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக அருவிகளில் குளிக்கக் கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக விதித்த தடை தொடர்ந்து நீடித்து வருவதால் அருவியில் குளிக்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இதையும் படிங்க: அராஜக ஆட்சியை பாஜக நடத்துகிறது - பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.