தருமபுரி: மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த வாரம் கர்நாடக காவிரி கரையோர பகுதிகள் மற்றும் தமிழ்நாடு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து படிப்படியாக 50 ஆயிரம் கனஅடி வரை அதிகரித்தது. நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி காவிரி ஆற்றில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் தடை விதித்தார்.
கடந்த ஏழு நாட்களாக நீடித்து வந்த தடை இன்று(மே25) ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து காலை 6 மணி நிலவரப்படி 8000 கன அடியாக குறைந்ததால் மாவட்ட நிர்வாகம் குளிக்கவும் மற்றும் பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடையை திரும்பப் பெற்றுக்கொண்டது.
ஒகேனக்கலில் காவிரி ஆற்றுப் பகுதி மற்றும் அருவியில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் காலை 9 மணி முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தடை விலகியதால் கோடை விடுமுறையை கொண்டாட ஒகேனக்கல்லில் நோக்கி வரும் சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கியுள்ளனா். சுற்றுலாபயணிகள் அருவியில் குளித்தும் தொங்குபாலத்தில் இருந்து காவிரி ஆற்றின் அழகை கண்டு ரசித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க தடை