ETV Bharat / state

பயோமெட்ரிக் முறையால் அவதியுறும் மலைக்கிராம மக்கள்! - bio metric system

பயோமெட்ரிக் முறையில் கைரேகை பதிவு செய்ய காலதமாதம் ஆவதால், இரு தினங்களாக பொருள்கள் பெறமுடியாமல் தவித்து வந்த தருமபுரி மலைக்கிராம மக்கள், நியாய விலைக் கடை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

bio metric system  bio metric system in ration card
பயோமெட்ரிக் முறையால் கடுப்பான மலை கிராம மக்கள்
author img

By

Published : Oct 10, 2020, 10:17 PM IST

தருமபுரி: பயோமெட்ரிக் முறையில் சரியாக கைரேகை பதிவாகாததால், இரண்டு நாள்களாக ரேஷன் பொருள்கள் வாங்க முடியாமல் தவித்த கோட்டுமலை, ஏரி மலை உள்ளிட்ட மலைக்கிராமங்களைச் சேர்ந்தோர், கோடுபட்டி நியாய விலைக் கடை முன்பு இன்று (அக்.10) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு, பயோமெட்ரிக் முறையில் ரேஷன் பொருள்கள் விநியோகிக்கப்பட்டு வந்தன. பயோமெட்ரிக் முறையில், பயனாளர்களின் கைரேகை முறையாகப் பதிவாகததால் பொருள்களை விநியோகிக்க முடியமால் நியாய விலைக் கடை ஊழியர்கள் திணறி வருகின்றனர்.

bio metric system  bio metric system in ration card
நியாயவிலைக் கடை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

கோடுபட்டி நியாயவிலைக் கடையிலும் இதே சிக்கல் எழுந்ததால், தருமபுரி மலைக்கிராம மக்கள் நியாயவிலைக் கடைக்கு வந்து காலையில் இருந்து மாலை வரை காத்திருந்தும் நேற்று (அக்.10) பொருள்கள் வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். தொடர்ந்து, இன்றும் அதே சிக்கல் நீடித்த நிலையில், கோபமடைந்த கிராம மக்கள், நியாய விலைக் கடை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முறையான சிக்னல் இல்லாத கிராமப் பகுதிகளில், கைரேகை பதிவு செய்ய முடியாமல் ஒரு குடும்ப அட்டைதாரருக்கு பொருள்கள் வழங்க இரண்டு மணிநேரம் ஆவதாக குற்றம் சாட்டிய அப்பகுதி மக்கள், பழைய முறையிலேயே ரேஷன் பொருள்களை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், பயோமெட்ரிக் முறையில் நாளொன்றுக்கு 20 முதல் 30 நபர்களுக்கு மட்டுமே பொருள்கள் வழங்கப்படுவதாகவும் வேதனைத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: நியாயவிலைக் கடை கைரேகை கருவி பிரச்னை- மக்கள் வேதனை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.