கடந்த சில தினங்களுக்கு முன் பாலக்கோடு புறவழிச்சாலை பகுதியில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாய் அமைந்துள்ள இடத்தில் பாலம் கட்டும் பணிக்காக ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டியபோது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
குடிநீர் குழாய் உடைந்ததை அலுவலர்கள் கவனிக்காமல் விட்டு சென்றுள்ளனர். இதனால் உடைந்த குடிநீர் குழாயில் சாக்கடை நீரும் கலந்துள்ளது. செம்மநத்தம், எருமைப்பட்டி, கொட்டபள்ளம் உள்ளிட்ட கிராமங்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வழங்கபட்டுள்ளது. இதனை குடித்த பலருக்கும் கடந்த இரண்டு தினங்களாகவே முதியவர்கள் 10க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.
அவர்கள் தொடர்ந்து பாலக்கோடு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சுகாதாரத் துறையினர் கிராமத்தில் முகாமிட்டு சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 10 நாள்களுக்குள் நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி