தர்மபுரி: சவுளுப்பட்டி கிராமத்தில் இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தர்மபுரி - மொரப்பூர் ரயில்வே பாதை பணிக்காக அதிகாரிகள் அளவீடு செய்துள்ளனர்.
அளவீடு செய்த அதிகாரிகளை கிராம மக்கள் சிறைப் பிடித்தனர். பேச்சுவார்த்தைக்கு பிறகு அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், ரயில்வே பாதை தங்களுக்கு வேண்டும். ஆனால் தங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்காதவாறு இருக்க வேண்டும். தாங்கள் குடியிருக்கும் பகுதியில் வீடுகளை இடிக்காமல் காலியிடம் இருக்கும் பகுதியில் ரயில்வே பாதை அமைக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க: விதிமீறலில் ஈடுபட்ட பெண் ஏ.டி.ஜி.பியின் அரசு வாகனம் : ரூ.500 அபராதம்