தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் காணொலி வாயிலாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகா தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் காணொலி வாயிலாக கலந்துகொண்டனர்.
குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் கார்த்திகா பேசுகையில், சென்ற ஆண்டு பயிர்காப்பீடு செய்த 2,598 விவசாயிகளுக்கு ரூ. 6 கோடியே 19 லட்சத்து 72 ஆயிரம் பயிர் மகசூல் இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் சிறு குறு விவசாயிகளுக்கு 100 விழுக்காடு மானியத்திலும், பிற விவசாயிகளுக்கு 75 விழுக்காடு மானியத்திலும் சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் அமைத்து கொடுக்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி அணையின் இடது மற்றும் வலதுபுறக்கால்வாய் நீட்டிப்பு செய்து காரிமங்கலம் பகுதியில் உள்ள கரும்பு மற்றும் மரவள்ளிக் கிழங்கு சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்கள் விளைவிக்கும் வேளாண் பொருள்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், துறை சார்ந்த அரசு அலுவலர்கள், விவசாய பிரதிநிதிகள் மற்றும் சாகோ நிறுவனம் ஆகியவற்றுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கூறும் விவசாயிகளின் கோரிக்கையானது விரைவாக அமைத்திட அரசுக்கு பரிந்துரை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.
இதையும் படிங்க:'இன்ஸ்பெக்டர் என்னை டார்ச்சர் பண்றாரு' - பெண் காவலர் வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!