நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என அறிவித்துவிட்டார். அவரது இந்த அறிவிப்பு சிலருக்கு துன்பத்தையும், பலருக்கு மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது. இது இப்படி இருக்க, ரஜினி தனிக்கட்சி தொடங்கமாட்டார்; ஆனால் அரசியலுக்கு வருவார் என்று, கடந்த 2004ஆம் ஆண்டு ஜோதிடர் வி.ஸ்ரீதர் கணித்திருந்தார். ஆனால் தனிக்கட்சிக்கு மட்டுமின்றி அரசியல் பிரவேசத்திற்கே ஒட்டுமொத்தமாக ரஜினி மூடுவிழா நடத்தியிருக்கிறார். இச்சூழலில் வி. ஸ்ரீதர் ரஜினிகாந்த் குறித்தும், வரும் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்தும் நம்மிடையே பேசியிருக்கிறார்.
இதற்கிடையே, ரஜினிகாந்த் டிசம்பர் மாதம் அரசியலுக்கு வருவார் அப்படி வரவில்லை என்றால் எனது ஜோதிட தொழிலையே விட்டுவிடுகிறேன் என யதார்த்த ஜோதிடர் ஷெல்வி சவால் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆகமொத்தம், அரசியல் பிரவேசத்திற்கு மட்டுமின்றி ஜோதிட கணிப்புகளுக்கும் ரஜினி மூடுவிழா நடத்திவிட்டார் என நெட்டிசன்கள் பதிவிட்டுவருகின்றனர்.