தர்மபுரி மாவட்டத்தில் இரு தினங்களாக தமிழ்நாடு உயர்கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்.
இந்நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு, அமானிமல்லாபுரம், நல்லம்பள்ளி ஒன்றியம் இலளிகம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மாற்றுக் கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள், அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நல்லம்பள்ளியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் உயா்கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் 500க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனா்.
அவர்களை அமைச்சர் சால்வை அணிவித்து வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் கோவிந்தசாமி, உள்ளிட்ட அதிமுகவினர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க...டிச.23 முதல் மு.க.ஸ்டாலின் பரப்புரை!