ETV Bharat / state

தருமபுரி மக்களவை உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்

author img

By

Published : Feb 17, 2020, 9:32 AM IST

தருமபுரி: அப்பாவு நகரில் புதிதாக கட்டப்பட்ட தருமபுரி மக்களவை உறுப்பினர் அலுவலகத்தை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

udayanithi stalin
udayanithi stalin

2019ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் தருமபுரியில் போட்டியிட்ட டாக்டர். செந்தில்குமார் வெற்றி பெற்றார்.

அதைத் தொடர்ந்து, பொதுமக்கள் குறைகளை தெரிவிப்பதற்கு வசதியாக அப்பாவு நகரில் அலுவலகம் ஒன்றை செந்தில்குமார் திறந்துவைத்தார். இதனிடையில், தருமபுரி மாவட்ட திமுக இளைஞர் அணி நிர்வாகிகளுடன் ஆலோசிக்க வருகை தந்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மக்களவை உறுப்பினர் அலுவலகத்தை நேற்று (பிப். 17) திறந்து வைத்தார்.

மக்களவை அலுவலகத்தை திறந்து வைத்த உதயநிதி

அப்போது, மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: சிஏஏவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பெறப்பட்ட கையெழுத்து படிவம் அனுப்பி வைப்பு!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.