கர்நாடக அணைகளான கபினி, கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் கடந்த சில நாள்களுக்கு நீர் திறந்துவிடப்பட்டது. இரு நாள்களுக்கு முன் திறந்துவிடப்பட்ட காவிரி நீர் இன்று (ஜூன் 22) தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலு பகுதியை வந்தடைந்தது.
காவிரி ஆற்றில் அதிகரித்த நீர்வரப்பு
கடந்த சில நாள்களாக நீர்வரத்து 1500 கனஅடியாக இருந்தது. கர்நாடக அணைகளிலிருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் வந்துள்ளதால் தற்போது காவிரி ஆற்றில் நீர்வரத்து 5,000 கன அடியாக உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணையைச் சென்றடையும் நீர்
கபினி, கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து 10 ஆயிரம் கன அடிக்கு மேல் நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும். அதனைத் தொடர்ந்து, காவிரி ஆற்றில் அதிகரித்துள்ள நீர் நாளை (ஜூன் 23) மேட்டூர் அணையைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 'தடுப்பூசி போடுங்கள்' - கூகுளின் டூடுல் அட்வைஸ்