ETV Bharat / state

Mobile shop theft video: செல்போன் கடையில் திருட்டு - திருட்டு முயற்சி

தர்மபுரியில் பூட்டியிருந்த செல்போன் கடைக்குள் புகுந்து நள்ளிரவில் ரூ.1 லட்ச ரூபாய் மதிப்பிலான செல்போன்களை திருடிச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை காவலர்கள் வலைவீசி தேடிவருகின்றனர்.

Watch video: செல்போன் கடையில் திருட்டு
செல்போன் கடையில் திருட்டு
author img

By

Published : Nov 20, 2021, 5:03 PM IST

தர்மபுரி: பாலக்கோடு அடுத்த சோமனாஅள்ளி பகுதியை சேர்ந்தவர் நாச்சியப்பன் (25). இவர் பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகம் அருகே செல்போன் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் இரவு நேரத்தில் மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கி செல்போன்களை (cell phones) திருடியுள்ளனர்.

இந்த நிலையில் மறுநாள் காலை கடையைத் திறந்து பார்த்த போது பொருள்கள் திருடப்பட்டிருப்பது குறித்து கடையின் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார். கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் செல்போன், மெமரி கார்டுகள் மற்றும் பணத்தினை சிலர் திருடுவது பதிவாகியுள்ளது.

செல்போன் கடையில் திருட்டு

இதேக் கடையில் சென்ற மாதம் திருட்டு முயற்சி நடைபெற்றது. நேற்று ஒரே நாளில் செல்போன் கடை, வீடியோ ஸ்டுடியோ என அடுத்தடுத்த இடங்களில் திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது.

மேலும் இப்பகுதியில் இருசக்கர வாகனங்கள் திருட்டு அதிகமாகி உள்ளதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்தச் சம்பவங்கள் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: திமுக வட்டச் செயலாளர் அலுவலகத்தில் பணம் திருட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.