தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள தீர்த்தமலை கிராமத்திலிருந்து மாரண்டஅள்ளி பகுதிக்கு துக்க நிகழ்ச்சிக்காக இருபதுக்கும் மேற்பட்டோர் ஆம்னி வேனில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, அரூர் அருகே உள்ள முனியப்பன் கோயில் அருகே எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் ஒன்று ஆம்னியை நோக்கி வந்துள்ளது. அதன்மீது மோதிவிடாமல் இருப்பதற்காக ஆம்னி வேன் ஓட்டுநர் வாகனத்தைத் திருப்பியுள்ளார்.
ஆனால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேன், சாலையின் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இது குறித்து அரூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பனிமூட்டத்தால் அடுத்தடுத்து நடந்த வாகன விபத்து:10 பேர் படுகாயம்