ETV Bharat / state

தர்மபுரியில் அத்தியாவசியப் பொருள்கள் விற்க தடை - ல் நாளை முதல் காய்கறிகள், பழங்கள், இறைச்சிகள் விற்க தடை

தர்மபுரி: தர்மபுரி நகரப் பகுதியில் நாளை முதல் காய்கறிகள், பழங்கள், இறைச்சி விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

not_vegetable_shop
not_vegetable_shop
author img

By

Published : Apr 6, 2020, 3:11 PM IST

இந்தியாவில் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் வரும் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பொதுமக்களின் அன்றாட தேவைகளுக்காக காய்கறிகள், மருந்தகங்கள், பழங்கள், மீன், இறைச்சிக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தர்மபுரி நகரப் பகுதியில் பொதுமக்கள் காலை நேரங்களில் அதிகளவில் கூடுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, பொது மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் விதமாக, நாளை முதல் தர்மபுரி நகரப்பகுதி சுற்றியுள்ள இடங்களில் காய்கறி, பழங்க்ள் இறைச்சி விற்கும் கடைகள் செயல்பட மாவட்ட ஆட்சியர் மலர்விழி தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

not_vegetable_shop
காய்கறிகள், பழங்கள், இறைச்சிகள் விற்க தடை

மேலும், பொதுமக்களுக்குத் தேவையான காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவை நேரடியாக வாகனங்கள் மூலம் அரசு நிர்ணயித்துள்ள விலையில் விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மறு உத்தரவு வரும்வரை வியாபாரிகள் யாரும் காய்கறிகள், பழங்கள், இறைச்சிக் கடைகள் நடத்தக்கூடாது என்றும் இதனை மீறும் வியாபாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

not_vegetable_shop
அத்தியாவசிய பொருட்கள் விற்க தடை

இதையும் படிங்க: மு.க.ஸ்டாலின்- பிரதமர் போனில் உரையாடல்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.