ETV Bharat / state

தர்மபுரியில் இறந்தவர் உடலை லாரி டியூப்பில் வைத்து ஆற்றைக் கடந்த அவலம் - தர்மபுரி மாவட்ட செய்திகள்

தர்மபுரி நாகர்கூடல் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சுடுகாட்டிற்குச் செல்ல சாலை வசதி இல்லாததால், உயிரிழந்தவர் உடலை அக்கிராம மக்கள் லாரிக்குப் பயன்படுத்தும் டியூப்பில் வைத்து ஆற்றைக் கடந்து அடக்கம் செய்த அவல நிலை நிகழ்ந்துள்ளது.

தர்மபுரி
தர்மபுரி
author img

By

Published : Mar 22, 2022, 11:09 PM IST

தர்மபுரி: நாகர்கூடல் ஊராட்சிக்குட்பட்ட ஆத்துகொட்டாய் பகுதியை சேர்ந்த சின்னசாமி என்பவர் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில், சுடுகாட்டிற்குச் செல்ல சாலை வசதி இல்லாததால், அக்கிராம மக்கள் உயிரிழந்தவர் உடல்களை அடக்கம் செய்ய ஆற்றைக் கடந்து செல்ல வேண்டிய நிலை பலகாலமாக இருந்து வந்துள்ளது.

நாகாவதி அணைக்கு தண்ணீர் செல்லக்கூடிய ஆறு குறுக்கே உள்ளதால் இக்கரையிலிருந்து மறுகரைக்குச் சென்று சுடுகாட்டு பகுதியை அடைய வேண்டும். மாற்று சாலை வழியாக செல்ல வேண்டுமென்றால் நான்கு கிலோமீட்டர் தூரம் சென்று வர வேண்டிய நிலை உள்ளது என அக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

தர்மபுரியில் இறந்தவர் உடலை லாரி டியூப்பில் வைத்து ஆற்றைக் கடந்த அவலம்

இந்த நிலையில் உயிரிழந்த சின்னசாமி உடலை, அக்கிராம மக்கள் லாரி டயர்களில் பயன்படுத்தும் டியூப்களில் வைத்து ஆற்றை கடந்து அடக்கம் செய்தனர். தங்கள் பகுதிக்கு பாலம் கட்டித்தர வேண்டும் என மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் அரசு நிறைவேற்றவில்லை எனக் குற்றஞ்சாட்டினர். விரைவில் பாலம் அமைத்து தர வேண்டும் எனவும் அவர்கள் மீண்டும் கோரிக்கை வைத்தனர்.

இதையும் படிங்க: மைக்ரோவேவ் ஓவனில் 2 மாத குழந்தை - அதிர்ச்சியில் அக்கம்பக்கத்தினர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.