ETV Bharat / state

மருத்துவமனை அலட்சியத்தால் நிறைமாத கர்ப்பிணி உயிரிழப்பு; கதறும் கணவன்... கண்டுகொள்ளுமா அரசு? - dharmapuri pregnant lady death bindhu doctor

தருமபுரி: தனியார் மருத்துவமனை வழங்கிய தவறான சிகிச்சையால் ஒன்பது மாத கர்ப்பிணி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிறைமாத கர்ப்பிணி
author img

By

Published : Jun 30, 2019, 1:24 PM IST

Updated : Jun 30, 2019, 2:03 PM IST

தருமபுரி மாவட்டம் சோகத்தூர் பகுதியைச் சார்ந்தவர் ஸ்ரீதர்(40). இவருக்கும் தருமபுரி குமாரசாமிபேட்டை பகுதியைச் சேர்ந்த அபிராமி என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகியுள்ளது. ஆனால், பத்து ஆண்டுகள் ஆகியும் இருவருக்கும் குழந்தை இல்லை‌. இதனால், தருமபுரி நகராட்சி பூங்கா அருகே உள்ள ஸ்ரீ அன்னை மருத்துவமனையில் குழந்தையின்மைக்காக மருத்துவர் பிந்துவிடம் அபிராமி சிகிச்சை பெற்றுள்ளார். இதையடுத்து, அபிராமி கர்ப்பம் தரித்துள்ளார்.

இந்நிலையில், ஒன்பது மாத கர்ப்பிணியான அபிராமிக்கு மருத்துவமனையில் பணியாற்றும் செவிலி ஒருவர் ஊசி போட்டுள்ளார். அந்த ஊசி செலுத்தப்பட்ட சில நிமிடங்களிலேயே அபிராமிக்கு உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தனியார் மருத்துவமனை நிர்வாகம் சாதாரண ஆட்டோவில் அபிராமியை தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அரசு மருத்துவமனை கைவிரித்துள்ளது.

இதனால், அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் தருமபுரி அரசு மருத்துவமனை முன்பு கர்ப்பிணி உயிரிழப்புக்கு காரணமான மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த நகர காவல் துறையினர், அபிராமியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

‘வேறொருவருக்கு இந்த நிலை வரக்கூடாது’ - கணவன் கண்ணீர்

இதனையடுத்து, உயிரிழந்த அபிராமியின் கணவர் ஸ்ரீதர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், “என் மனைவிக்கு குழந்தை பிறக்க இன்னும் 10 நாட்கள் தான் உள்ளது. 10 ஆண்டுகள் குழந்தை இல்லாமல் தற்போது மனைவி கர்ப்பமாகியிருந்தார். இதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. தவறான சிகிச்சை தான் என் மனைவியின் உயிரிழப்புக்கு காரணம். இதற்கு காரணமான மருத்துவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நிலை வேறு யாருக்கும் வந்துவிடக்கூடாது” என கண்ணீர் மல்க வேதனையுடன் கூறியது காண்போர் அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

நிறைமாத கர்ப்பிணி மனைவியை பறிகொடுத்துவிட்டு நடவடிக்கைக்காக காத்திருக்கும் கணவனின் குரலுக்கு அரசு செவி மடுக்குமா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், சம்பந்தப்பட்ட மருத்துவமனை பூட்டி சீல் வைக்கப்பட வேண்டும் என்றும், காரணமானவர்கள் யார் யாரோ அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளும் வலுவாக எழுந்து வருகிறது.

Intro:TN_DPI_01_30_ HOSPITAL WOMEN DEATH _VIS_BYTE_7204444

Body:TN_DPI_01_30_ HOSPITAL WOMEN DEATH _VIS_BYTE_7204444

Conclusion:

தருமபுரியில் தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் ஒன்பது மாத கர்ப்பிணி உயிரிழப்பு தருமபுரியில் பரபரப்பு.   தர்மபுரி சோகத்தூர் பகுதியைச் சார்ந்தவர் ஸ்ரீதர் வயது 40 விவசாயி இவருக்கும் தர்மபுரி குமாரசாமிபேட்டை பகுதியை சேர்ந்த  அபிராமி என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை ‌. அபிராமி தனியார் மாவு மில் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார்.  அபிராமி தர்மபுரி நகராட்சி பூங்கா அருகில் உள்ள ஸ்ரீ அன்னை மருத்துவமனையில் குழந்தையின்மைகாக மருத்துவர் பிந்துவிடம்  சிகிச்சை பெற்றுள்ளார். சிகிச்சையைத் தொடர்ந்து அவருக்கு குழந்தை உருவாகி உள்ளது. இந்நிலையில் 9 மாத கர்ப்பிணியான அபிராமிக்கு நேற்று மருத்துவமனையில் செவிலியர் ஊசி போட்டுள்ளார்.ஊசி செலுத்திய சில நிமிடங்களிலேயே அபிராமிக்கு உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது இதனை அறிந்த தனியார் மருத்துவமனை நிர்வாகம் சாதாரண ஆட்டோவில் அபிராமியை தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.மருத்துவக் கல்லூரியில் பரிசோதனை செய்ததில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது.இதனைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் இன்று தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு கர்ப்பிணி உயிரிழப்புக்கு காரணமான மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து தர்மபுரி நகர காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தது பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் கலைந்து சென்றனர்.உயிரிழந்த அபிராமியின் கணவர் ஸ்ரீதர் செய்தியாளிடம் பேசும்போது.  திருமணம் நடைபெற்று 10 ஆண்டுகள் ஆன பிறகும் தங்களுக்கு குழந்தை இல்லை என்றும் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்ற பிறகுதான் குழந்தை உருவாகியது என்றும் நிறைமாத கர்ப்பிணியான அபிராமிக்கு குழந்தை பிறக்க இன்னும் 10 நாட்கள் தான் உள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவர்  வயிற்றில் உள்ள குழந்தைக்கு அசைவுகளில் பிரச்சனை உள்ளதாகவும் அதற்காக நான்கு நாட்கள் ஊசி மூலம் மருந்து செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இரண்டு நாட்கள் ஊசி மூலம் மருந்து செலுத்தியுள்ளனர் நேற்று ஊசி போட வந்த போது அப்போது மருத்துவமனையில் செவிலியர் ஊசி செலுத்த வந்துள்ளார் அபிராமியின் கணவர் மருத்துவரை பார்த்து விட்டு ஊசி போட்டுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். ஆனால் செவிலியர் மருத்துவர் உள்ளேதான் இருக்கிறார் ஊசி போட்டுக்கொண்டு மருத்துவரைப் பாருங்கள் என்று சொல்லிவிட்டு ஊசியை செலுத்தி உள்ளார் ஊசி செலுத்திய சில நிமிடங்களிலேயே உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. உடல்நிலை மோசமானதை அறிந்த தனியார் மருத்துவமனை தனக்கு தகவல் தெரிவிக்காமலேயே ஆட்டோ மூலம் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்து விட்டார்கள். பின்பு தான் தங்களுக்கு தகவல் அளித்தார்கள் என்றும் எனவே தவறான சிகிச்சை தான் தன் மனைவி உயிரிழப்புக்கு காரணம் என்றும் இதற்கு காரணமான மருத்துவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயிரிழந்த அபிராமி கணவர் ஸ்ரீதர் தெரிவித்தார்.

Last Updated : Jun 30, 2019, 2:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.