ETV Bharat / state

மூக்கனூரில் முளைத்த புதிய அருவிகள்: கிராம மக்கள் உற்சாக குளியல்

author img

By

Published : Dec 9, 2019, 12:23 PM IST

தருமபுரி: மூக்கனூர் மலையிலிருந்து புதிதாக தோன்றிய அருவியில் கிராம மக்கள் குளித்து கொண்டாடினர்.

falls
falls

தருமபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த நல்லாகுட்லள்ளி கிராமப் பகுதியில் மூக்கனூர் மலை உள்ளது. இந்த மலை 3000 அடி உயரம் கொண்டது. இந்த மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது.

இதன் கரணமாக இந்த மலையின் பல்வேறு பகுதிகளில் புதிய அருவிகள் உருவாகியுள்ளன. புதிதாக தோன்றிய இந்த அருவிகளை அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்து வருகின்றனர். மேலும் சுமார் 20 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் கொட்டுவதால், இந்த புது அருவிகளில் அப்பகுதி மக்கள் குளித்தும் மகிழ்கின்றனர். இந்த தண்ணீரானது அருகில் உள்ள ஓடைகளுக்கு சென்று வீணாகிறது.

falls
புதிய அருவிகள்

எனவே மழைக்காலத்தில் வரும் நீரை இப்பகுதி விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டுமென விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் இந்த மலையடிவாரத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலம், வனத்துறைக்கு சொந்தமான நிலங்களை கையகப்படுத்தி தடுப்பணை கட்டி மழைகாலங்களில் வரும் நீரை சேமிக்கலாம். இதன்மூலம் கடத்தூர் பகுதிகளில் உள்ள சுமார் 5000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசனத்திற்காக தண்ணீர் கொடுக்க முடியும். அதேபோல் சுமார் 20 கிலோமீட்டர் அளவிற்கு நிலத்தடி நீர்மட்டம் உயரும். எனவே இப்பகுதியில் சிறிய தடுப்பணையை அரசு உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

falls
கிராம மக்கள் உற்சாக குளியல்

Intro:தருமபுரி அருகே மூக்கனூர் மலையிலிருந்து புதியதாக தோன்றிய அருவி கிராம மக்கள் அருவியில் குளித்து கொண்டாட்டம். Body:தருமபுரி அருகே மூக்கனூர் மலையிலிருந்து புதியதாக தோன்றிய அருவி கிராம மக்கள் அருவியில் குளித்து கொண்டாட்டம். Conclusion:தருமபுரி அருகே மூக்கனூர் மலையிலிருந்து புதியதாக தோன்றிய அருவி கிராம மக்கள் அருவியில் குளித்து கொண்டாட்டம்.

தருமபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த நல்லாகுட்லள்ளி கிராமப் பகுதியில் மூக்கனூர் மலை உள்ளது. 3000 அடி உயரம் கொண்ட இந்த மலையில் கடந்த சில தினங்களாக தருமபுரி மாவட்டத்தில் செய்த தொடர் மழை காரணமாக மலைகளில் இருந்து தண்ணீர் பல்வேறு இடங்களில் இருந்து வரும் தண்ணீர் ஒன்று சேர்ந்து புதிய அருவிகளாக உருவெடுத்துள்ளது. இந்த அருவியை பார்ப்பதற்கு குற்றால அருவி உயரத்திலிருந்து தண்ணீர் கொட்டுவதால் இந்த பகுதியில மக்கள் அருவிகளை கண்டு ரசிக்கின்றனர்.

மேலும் சுமார் 20 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் கொட்டுவதால், இந்த புது அருவிகளில் அப்பகுதிகளில் மக்கள் குளித்து மகிழ்கின்றனர். புதியதாக அருவிகள் உருவெடுத்துக் கொட்டுவதால், இதில் வருகின்ற தண்ணீர் அருகில் உள்ள ஆற்று ஓடைகளில் சென்று வீணாகிறது. கடந்த சில தினங்களாக சாரல் மழை பெய்ததால் இந்த தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் இந்த தண்ணீர் சுமார் ஒரு மாத காலத்திற்கு குறையாமல் பெருக்கெடுத்து ஓடும் என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். மழை வரும் காலத்தில் மலையிலிருந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் நிலை இருந்து வருகிறது.
மழைக்காலத்தில் வரும் தண்ணீரை இந்த பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு பயன் பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர். இந்த மலையடிவாரத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலம் மற்றும் வனத்துறைக்கு சொந்தமான நிலங்களை கையகப்படுத்தி இந்த இடத்தில் ஒரு தடுப்பணை கட்டினால், சுமார் 2 முதல் 3 டிஎம்சி வரை தண்ணீரை தேக்கலாம். இதன் மூலம் கடத்தூர் பகுதிகளில் உள்ள சுமார் 5000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசனத்திற்காக தண்ணீர் கொடுக்க முடியும். அதே போல் சுமார் 20 கிலோமீட்டர் அளவிற்கு நிலத்தடி நீர்மட்டம் உயரும். எனவே இந்தப் பகுதியில் ஒரு சிறிய தடுப்பணையை அரசு உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.