தருமபுரி: பிரைம் பாய்ண்ட் பவுண்டேஷன் என்ற அமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆற்றிய பணிகளை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு வருகிறது. அது தவிர ஒவ்வொரு ஆண்டும் அகில இந்திய அளவில் சிறப்பாக பணியாற்றிய உறுப்பினர்களுக்கு சன்சாத் ரத்னா விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது.
இந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ’தமிழ்நாட்டைச் சேர்ந்த 39 நாடாளுமன்ற உறுப்பினர்களில் தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில் குமார் 453 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். இவர் சுய முயற்சி விவாதங்கள், தனிநபர் மசோதாக்கள், கேள்விகள் உள்ளிட்டவற்றில் பங்கு பெற்று தமிழ்நாடு அளவில் முதல் இடத்திலும், அகில இந்திய அளவில் 17ஆவது இடத்திலும் உள்ளார்.
இவருக்கு அடுத்தபடியாக தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார் 409 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். இருவரும் இதுவரை 100 விழுக்காடு அமர்வுகளில் பங்கேற்றுள்ளனர். 17ஆவது மக்களவைத் தொடங்கி 2022ஆம் ஆண்டு குளிர்கால கூட்டத்தொடர் வரை கிடைக்கப்பெற்ற புள்ளி விவரங்கள் அடிப்படையில் 260 விவாதங்களில் 66 தொடக்க உரைகளும் 194 விவாதங்களில் கலந்து கொண்டும் மூன்று தனி நபர் மசோதாக்கள் மற்றும் 384 கேள்விகளை எழுப்பியுள்ளார்’ எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பள்ளிக் கட்டடம் இல்லாமல் மொட்டை மாடியில் பாடம் கற்கும் அவலம்!