தர்மபுரி: நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில்குமார், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியாவை நேரில் சந்தித்து கோரிக்கை கடிதம் அளித்துள்ளார்.
அக்கடிதத்தில், ’நான் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையின் கமிட்டி உறுப்பினராக இருக்கிறேன். தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ’சூப்பர் ஸ்பெஷாலிட்டி' மருத்துவ பிரிவு இல்லை. எனவே மருத்துவப் பிரிவை தொடங்க வேண்டும்.
மருத்துவ பிரிவை தொடங்கியதுடன், மருத்துவகல்லூரியின் தரத்தையும் உயர்த்த வேண்டும். இதன் மூலம் மக்களுக்கு சுகாதார வசதி மேம்படும். இதனை பிரதம மந்திரி சுவஸ்தியா சுரக்ஷா யோஜனாம் திட்டத்தின் கீழ் நிறுவி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தாய் சேய் நல பயன்பாட்டிற்காக கூடுதலாக இரண்டு 102 ஆம்புலன்ஸ் வாகனங்கள் வழங்க வேண்டும்.
இதன் மூலம் வீடுகளில் இருந்து பிரசவத்திற்கு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லவும் சிகிச்சை பெற்று வீடு திரும்ப தாய்,சேய் என இருவருக்கும் உதவியாக இருக்கும்.
தாய்மார்களுக்கு விரைவாக சிகிச்சை அளிக்கவும், பிரசவத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய பாதுகாப்பான பிரசவத்திற்கு இச்சேவை வழிவகுக்கும். இச்சேவை மூலமாக மருத்துவமனைகளில் பாதுகாப்பான பிரசவத்திற்கு வழி ஏற்படும்" என கடித்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:BB DAY 28: கன்டெண்ட் இல்லாமல் திணறும் பிக்பாஸ்.... கமல் ஹாசன் டாஸ்க்கில் நடக்கப் போவது என்ன?