ETV Bharat / state

முன்னாள் அமைச்சர் இணைந்தால் வரவேற்போம் - எம்.பி. செந்தில்குமார்!

முன்னாள் அமைச்சர் பழனியப்பன் திமுகவில் இணைந்தால் வரவேற்போம் என தர்மபுர மக்களவைத் தொகுதி உறுப்பினர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

எம்பி செந்தில்குமார்
எம்பி செந்தில்குமார்
author img

By

Published : Jun 29, 2021, 5:58 PM IST

தர்மபுரி: சீன தூதரகம் வழங்கிய பல்ஸ் ஆக்ஸி மீட்டர், ஆக்சிஜன் கன்சண்ட்ரேட்டர்களை, தர்மபுரி அரசு கல்லூரி மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முதல்வர் அமுதவள்ளியிடம் திமுகவை சோ்ந்த தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் இன்று(ஜூன்.29) வழங்கினார். இதனைத் தொடர்ந்து 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தாய் சேய் நல கட்டடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “தர்மபுரி மாவட்டத்தில் கரோனா தொற்று இரண்டாம் அலையில் எதிர்பார்த்ததைவிட பாதிப்பு அதிகளவில் இருந்தது. ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கை பற்றாக்குறை ஏற்பட்டது.

எம்பி செந்தில்குமார்

அரசு உதவியுடன் அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. சீன தூதரகத்திலிருந்து பல்ஸ் ஆக்ஸி மீட்டர், ஆக்சிஜன் காண்சடேடர் கோரியிருந்தோம் அவர்களும் உதவிகளை வழங்கினர். தாய் சேய் மருத்துவமனைக்காக கட்டிடம் கட்டப்பட்டது. கரோனா மூன்றாம் அலை தாக்கம் ஏற்பட்டால் சிகிச்சை அளிக்க பயன்படுத்தும் வகையில் அனைத்து அறைகளுக்கும் ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

விரைவில் இக்கட்டடம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்து மருத்துவமனை வசம் ஒப்படைக்கப்படும். மூன்றாம் அலை ஏற்பட்டாலும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க 1,500 படுக்கை வசதிகளுடன் தயார் நிலையில் மாவட்ட மருத்துவமனை உள்ளது.

அதிமுகவில் முன்னாள் அமைச்சராக இருந்து தற்போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் உள்ள பழனியப்பன் திமுகவில் இணைய போவதாக சமூகவலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. அவர் திமுகவில் இணைய வந்தால் வரவேற்போம்” என்றார்.

இதையும் படிங்க: நடிகர் அர்ஜூன் கட்டிய ஆஞ்சநேயர் கோயிலில் கும்பாபிஷேகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.