தர்மபுரி: பாலக்கோடு அடுத்த சூடப்பட்டு நெடுஞ்சாலையில் அதிகாலை முதலே சாரல் மழை பெய்து வருகிறது. சாரல் மலையின் காரணமாக சாலை வழுவழுப்பாக இருந்துள்ளது. இந்நிலையில், ஓசூரில் இருந்து தர்மபுரி நோக்கி வந்த அரசுப்பேருந்து பாலக்கோடு - சூடப்பட்டி நெடுஞ்சாலையில் வந்தபோது எதிரே வந்த லாரி மீது மோதாமல் இருக்க பேருந்து ஓட்டுநர் திடீரென பிரேக் அடித்தார்.
ஆனால், சாலை வழுவழுப்பாக இருந்தநிலையில் பேருந்தில் பிரேக் பிடிக்காமல், அரசுப்பேருந்து கட்டுப்பட்டை இழந்து அருகில் இருந்த விவசாய நிலத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் அதிகளவு காயம் ஏற்பட்ட பத்துக்கு மேற்பட்டோர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து மகேந்திரமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ராசிபுரத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்டவர் கைது