ETV Bharat / state

தொடர் விடுமுறை காரணமாக ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்! - dharmapuri hoganakkal falls

தருமபுரி மாவட்டத்திலுள்ள ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தில், சுற்றுலாப் பயணிகள் பரிசலில் சென்று சினி அருவியில் குளித்து உற்சாகமாகக் கொண்டாடினர்.

ஒகேனக்கல்
ஒகேனக்கல்
author img

By

Published : Oct 18, 2021, 7:41 AM IST

தருமபுரி: ஆயுத பூஜை, விஜயதசமி விடுமுறை நாளோடு வார விடுமுறையும் அடுத்தடுத்த வந்ததால் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தில் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்தோடு குவிந்தனர். வெளி மாவட்டங்கள், கர்நாடக பகுதியிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகைதந்து பரிசலில் சென்று சினி அருவி பகுதியில் குளித்து உற்சாகமாகச் சுற்றுலாவைக் கொண்டாடினர்.

பரிசல் பயணம்
பரிசல் பயணம்

ஒகேனக்கல் மெயின் அருவியில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது. பரிசல் மட்டும் இயக்க வட்டார வளர்ச்சி அலுவலர் அனுமதி அளித்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகச் சுற்றுலாப் பயணிகள் 750 ரூபாய் கட்டணம் செலுத்தி பரிசல் மூலம் சென்று சினி அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

இதையும் படிங்க: காவலர்கள் குடியிருப்பில் விரிசல்; 32 குடும்பங்கள் வெளியேற்றம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.