தர்மபுரி மாவட்டம், மாதேஹள்ளி கிராமத்தில் இன்று (ஜூன் 13) நடந்த தேர்த்திருவிழாவின்போது அச்சாணி முறிந்து தேர் சரிந்து விழுந்தது. அப்போது தேருக்கடியில் 5 பேர் சிக்கிக்கொண்டனர்.
தேரின் இடிபாடுகளை அகற்றி சிக்கியவர்கள் மீட்கப்பட்டனர். இதனையடுத்து அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் 2 பேர் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
தர்மபுரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தேர் கவிழ்ந்த விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உயர் தரமான சிகிச்சையை வழங்க வேண்டும் என்றும் உயிரிழந்தவர்களுக்கு 50 லட்சம் நிவாரண நிதியை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தர்மபுரி தேர் விபத்து... இரண்டு பேர் உயிரிழப்பு...!