ETV Bharat / state

ரமலான் நோன்பு கஞ்சி தயாரிக்க அரிசி வழங்கிய அமைச்சர் ! - ramadan nombu

தர்மபுரி: மாவட்டத்தில் புனித ரமலான் நோன்பு கஞ்சி தயாரிக்க 700 பயனாளிகளுக்கு அமைச்சர் கே.பி.அன்பழகன் அரிசி வழங்கினார்.

ரமலான் நோம்பு கஞ்சி தயாரிக்க அரிசி வழங்கி அமைச்சர் அன்பழகன்!

author img

By

Published : May 4, 2020, 1:49 PM IST

தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவிப்பின்படி இந்த ஆண்டு மாநிலத்தில் உள்ள 2 ஆயிரத்து 895 பள்ளிவாசல்களுக்கு ரமலான் நோன்பு கஞ்சி தயாரிக்க 5 ஆயிரத்து 450 டன் அரிசி வழங்கப்படவுள்ளது.

அதன்படி, தர்மபுரி மாவட்டத்தில் 29 பள்ளிவாசல்களை சேர்ந்த 20 ஆயிரத்து 595 பயனாளிகள் பயன்பெறும் வகையில் 82 டன் அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது வழங்கப்பட்டுவருகிறது. அந்தந்த பகுதிகளுக்கு உட்பட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளிலிருந்து பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்கப்படுகிறது.

இந்நிலையில், தர்மபுரி அரசு அவ்வையார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 700 பயனாளிகளுக்கு புனித ரமலான் நோன்பு கஞ்சிக்கான அரிசியை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வழங்கினார்.

இதையும் படிங்க...தடைசெய்யப்பட்ட நத்தம் பகுதியில் தடுப்புகள் அகற்றம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.