தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் நடைபெற்ற விழாவில் 3530 பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.10.65 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்.
இவ்விழாவில் பேசிய அமைச்சர், பாலக்கோடு பென்னாகரம் பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அரசு கலைக் கல்லூரியை தொடங்கியதன் காரணமாக வெளி மாவட்டங்களுக்குச் சென்று படிக்கக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இம்மாவட்டத்தில் அதிகளவு மாணவ மாணவியர் உயர்கல்வி படித்து வருகின்றனர் என்றார்.
உள்ளாட்சி உங்களாட்சி 4 - ஊராட்சி நிர்வாகத்தின் பொறுப்பு
மேலும், அதிமுக அரசு தருமபுரி மாவட்டத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சட்டக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, அரசு பலவகை பாலிடெக்னிக் கல்லூரி, போன்றவை தொடங்கியதன் காரணமாக தருமபுரி மாவட்ட மாணவ மாணவியர் 98 விழுக்காடு உயர்கல்வி படித்துவருவதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்புக் குறை தீர்க்கும் முகாம்களில், இம்மாவட்டத்தைச் சேர்ந்த ஏழு வட்டங்களிலும் சுமார் 50 ஆயிரத்து 712 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் முனைப்போடு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.