ETV Bharat / state

'பிரச்சினைகளைச் சரிசெய்த பின் ராசிமணலில் அணை கட்டுவது குறித்து நடவடிக்கை' - காவிரியின் குறுக்கே ராசி மணலில் அணை

ஒரு சில பிரச்சினைகள் இருப்பதால் அதனை முழுவதுமாகச் சரிசெய்த பின்பு ராசிமணலில் அணை கட்டுவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

அமைச்சர் துரைமுருகன்
அமைச்சர் துரைமுருகன்
author img

By

Published : Nov 17, 2021, 9:27 AM IST

தர்மபுரி: பென்னாகரத்தை அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆறு, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் நீரேற்று நிலையம் உள்ளிட்ட பகுதிகளை துரைமுருகன் ஆய்வுசெய்தார். இதனையடுத்து செய்தியாளரைச் சந்தித்த அவர், "காவிரியின் குறுக்கே ராசிமணலில் அணை கட்டுவது தொடர்பாக நீண்ட நாள்களாகக் கோரிக்கை இருந்துவருகிறது.

அமைச்சர் துரைமுருகன் ஆய்வு
அமைச்சர் துரைமுருகன் ஆய்வு

காவிரியின் குறுக்கே ராசிமணலில் அணை

இந்த அணை கட்டுவதில் ஒரு சில பிரச்சினைகள் இருப்பதால் அதனை முழுவதுமாகச் சரிசெய்த பின்பு ராசி மணலில் அணை கட்டுவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

அமைச்சர் துரைமுருகன் பேட்டி

மேகதாது அணை கட்டுவது தொடர்பாகக் கர்நாடக அரசு எங்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வரும், அணை கட்டுவோம் என்று கர்நாடக முதலமைச்சர் தெரிவித்துள்ள கருத்துக்குப் பதிலளித்த துரைமுருகன், "நீதிமன்றத்திற்குச் செல்லும் எல்லோருக்கும் தீர்ப்பு எங்களுக்குச் சாதகமாகத்தான் வரும் என்று சொல்வார்கள் அதில் தவறு இல்லை. நாங்களும் சொல்கிறோம் தீர்ப்பு எங்களுக்குச் சாதகமாகத்தான் வரும்" என்று தெரிவித்தார்.

எண்ணம் எனக்குள் வந்திருக்கிறது

தொடர்ந்து பேசும்போது, "காவிரி உபரி நீரைத் தருமபுரி மாவட்டத்திலுள்ள ஏரிகளுக்கு நிரப்பினால் வேளாண்மை செழிக்கும், வாழ்வாதாரம் உயரம் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். நான் தற்போது ஒகேனக்கல் பகுதியில் ஆய்வுசெய்தேன்.

இதில் மழைக்காலங்களில் அதிகமாகச் செல்லும் உபரி நீரை பென்னாகரம் அருகே உள்ள கென்டேயன் குட்டை ஏரி நிரம்பினால் அனைத்து ஏரிகளுக்கும் நீர் கொண்டுசெல்ல வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் வந்திருக்கிறது.

அமைச்சர் துரைமுருகன் ஆய்வு
அமைச்சர் துரைமுருகன் ஆய்வு

எதற்குத்தான் மறுப்புத் தெரிவிக்கவில்லை

இதனைத் துறைசார்ந்த அலுவலர்களைக் கொண்டு விரிவான ஆய்வுசெய்த பிறகு இத்திட்டத்தைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.

காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்திற்குக் கர்நாடகா அரசு எதிர்ப்புத் தெரிவித்தது குறித்த கேள்விக்கு, கர்நாடகா அரசு எதற்குத்தான் மறுப்புத் தெரிவிக்கவில்லை எனக் கிண்டலாகத் தெரிவித்தார் துரைமுருகன்.

அமைச்சர் துரைமுருகன் பேட்டி
அமைச்சர் துரைமுருகன் பேட்டி

இந்த, ஆய்வின்போது மாவட்ட ஆட்சியா் திவ்யதா்ஷினி, தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜி.கே. மணி, எஸ்.பி. வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ராசிமணல் அணை காமராஜரின் திட்டம்

தமிழ்நாட்டில் காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது 1961 - 62ஆம் ஆண்டுகளில், ராசிமணலில் அணை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டதோடு பணிகளும் தொடங்கப்பட்டன.

அதைத் தொடர்ந்து, எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் அப்போது சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த பழ. நெடுமாறனால் ராசிமணல் அணையைக் கட்ட மத்திய அரசிடம் அனுமதி கேட்டு முன்மொழியப்பட்ட தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

ராசிமணல் அணை எம்ஜிஆரின் விருப்பம்

"தமிழ்நாட்டிற்குள் ஓடும் நீரைத் தேக்கிப் பயன்படுத்திக்கொள்ள சட்டப்படி தமக்கு முழு உரிமை உள்ளது. தமிழ்நாடு நோக்கிவரும் நீரைத் தடுத்து மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்குச் சட்டப்படி உரிமை இல்லை" என்று அத்தீர்மானத்தில் குறிப்பிட்டு அதனை மத்திய அரசிடம் அப்போதைய முதலமைச்சர் எம்ஜிஆரே நேரில் வழங்கி வலியுறுத்தியுள்ளது கவனிக்கத்தக்கதாகும்.

இதையும் படிங்க: நீட் தேர்வு: தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விகிதம் உயர்வு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.