தருமபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ராமாக்கால், அன்னசாகரம் ஆகிய ஏரிகளில் குடிமரமாத்து பணிகளை தமிழ்நாடு உயா்கல்வித்துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் துவங்கிவைத்தார். இதன்பின் செய்தியாளா்களை சந்தித்து பேசிய அமைச்சர், "உயர் கல்வித்துறையின் கீழ் இயங்கும் கல்லூரிகளின் கட்டடங்கள் சுகாதாரத்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளன என்றார்.
மேலும் அவர் கூறுகையில், அவை கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைக்கும் இடமாக பயன்படுத்தப்படுவதால் கல்லூரி தேர்வுகள் குறித்தும், கல்லூரி தொடங்குவது குறித்தும் இன்னும் எந்தவித முடிவும் எடுக்கவில்லை. தமிழ்நாடு கரோனா இல்லாத மாநிலமாக ஆன பிறகு, கல்லூரி வளாகங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நோயாளிகள் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பட்டப்பின், கல்லூரி வளாகங்கள் முழுமையாக கிருமி நாசினி கொண்டு தூய்மை படுத்தப்பட்டு மாணவர்களின் நலனிற்கு எந்தவித அச்சமும் இல்லை என்ற நிலை உருவான பிறகுதான் கல்லூரி திறக்கப்படும்." எனக் கூறினார்.
மேலும், கரோனா பாதிப்பு தமிழ்நாட்டை விட்டு விலகும் சூழ்நிலை எப்போது ஏற்படுகிறதோ அப்போது கல்லூரிகளில் கல்வியாண்டு தொடங்குவதற்கும் தேர்வு நடத்துவதற்கும், பொறியியல் கலந்தாய்வு தொடங்குவதற்கும் உயர்கல்வித்துறை தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
இதையும் பார்க்க: ஊரடங்கு நீடித்தால் 60 விழுக்காடு வருவாய் இழப்பு - ஐஐடி ஆய்வில் தகவல்