ETV Bharat / state

அத்தியாவசியப் பொருள்களை பதுக்கி, அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை

author img

By

Published : Mar 30, 2020, 10:06 PM IST

தருமபுரி: ஊரடங்கை பயன்படுத்தி அத்தியாவசியப் பொருள்களை பதுக்கி விலையை அதிகரித்து விற்கும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

minister anbalagan meeting about corona precautions

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் கரோனா வைரஸ் முன் தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் மலர்விழி முன்னிலையில் நடைபெற்றது.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.அன்பழகன், 'தருமபுரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளுக்கு சுகாதாரமான குடிநீர் கிடைக்கவும் அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு, 144 தடை உத்திரவுகளை பயன்படுத்தி அத்தியாவசியப் பொருள்களை பதுக்குபவர்கள் மீதும், விலையை அதிகரித்து விற்கும் வியாபாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

கரோனா வைரஸ் முன் தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம்

ஏப்ரல் 2ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள நான்கு லட்சத்து 25 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை ரூ. 1,000, விலையில்லா அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருள்களை வீடு வீடாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது' என்றார்.

இதையும் படிங்க... வைரஸ் பரவலை தமிழ்நாடு அரசு கட்டுக்குள் வைத்துள்ளது - மத்திய அமைச்சர் பாராட்டு

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.