ETV Bharat / state

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய ரவுடி சீசிங் ராஜா ஆந்திராவில் கைது? - armstrong murder case - ARMSTRONG MURDER CASE

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய ரவுடி சீசிங் ராஜாவை தனிப்படை போலீசார் ஆந்திராவில் இன்று கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சீசிங் ராஜா, படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்
சீசிங் ராஜா, படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 22, 2024, 10:50 PM IST

சென்னை: சென்னை பெரம்பூர் பகுதியில் கடந்த ஜூலை மாதம் 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நாகேந்திரன், மறைந்த ரவுடி ஆற்காடு சுரேஷ் சகோதரர் பொன்னை பாலு உட்பட பல்வேறு ரவுடிகள் என மொத்தம் இதுவரை 28 நபர்களை செம்பியம் தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களை மாறி, மாறி காவலில் எடுத்து செம்பியம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்டுள்ள நபர்களுடன் தொடர்பில் இருந்ததாக சுமார் 200க்கும் மேற்பட்ட நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடி சம்போ செந்தில், சீசிங் ராஜா, வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் உள்ளிட்ட நபர்களை செம்பியம் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்பு செங்கல்பட்டு மாவட்டம், நீதிமன்றம் வழக்கு ஒன்றில் ஆஜராகாத சீசிங் ராஜாவை தீவிரமாக தேடி வருவதாகவும், அவர் பற்றி தகவல் கிடைத்தால் தெரிவிக்க வேண்டும் என போலீசார் தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதிகளில் சுவர் ஒட்டிகளை ஒட்டியிருந்தனர்.

இந்நிலையில் இன்று (செப் 22) காலை ஆந்திர மாநிலம், கடப்பாவில் பதுங்கி இருந்த சீசிங் ராஜாவை சென்னை தனிப்படை போலீசார் கைது செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக தீவிரமாக தேடிவந்த நிலையில், தற்போது கைது செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; 28வது நபர் டெல்லியில் கைது!

ஆனால் செம்பியம் தனிப்படை போலீசார் சீசிங் ராஜாவை கைது செய்திருப்பதாக எந்த ஒரு தகவலையும் உறுதிப்படுத்தவில்லை. சீசிங் ராஜாவின் குடும்பத்தினர் இன்று காலை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோவில்,"சீசிங் ராஜாவின் மனைவி தனது கணவர் காலையில் வெளியில் சென்றவர் இதுவரை வீட்டிற்கு வரவில்லை. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அவருக்கு தொடர்பு உள்ளதாகக் கூறி தனிப்படை போலீசார் அவரை கைது செய்திருக்கின்றனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும், எனது கணவருக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. எனக்கு திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகின்றது. இந்த காலக்கட்டத்தில் அவர் எந்த ஒரு குற்ற சம்பவங்களிலும் ஈடுபடவில்லை. பொய்யான செய்திகளை பரப்பாதீர்கள்.

எனது கணவரை போலி என்கவுண்டர் செய்ய உள்ளதாக தகவல்கள் வருகிறது. தமிழ்நாடு அரசு என் கணவரை உயிருடன் மீட்டு தர வேண்டும் என கண்ணீர் மல்க பேசியுள்ளார். மேலும் சீசிங் ராஜா மீது ஏற்கனவே கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல். மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.