ETV Bharat / sports

செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா படைத்த வரலாற்று சாதனை! விஸ்வநாதன் ஆனந்த் பெருமிதம் - 45th FIDE chess olympiad 2024

45வது செஸ் ஒலிம்பியாட்டில் தங்கப்பதக்கம் வென்ற இந்தியாவின் ஆண், பெண் இரு அணிகளுக்கும் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவரும் (FIDE), இந்தியாவின் கிராண்ட் மாஸ்டருமான விஸ்வநாதன் ஆனந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய இரு அணிகள் வெற்றி பெற்ற போஸ்டர், விஸ்வநாதன் ஆனந்த்
இந்திய இரு அணிகள் வெற்றி பெற்ற போஸ்டர், விஸ்வநாதன் ஆனந்த் (Credits - International Chess Federation X Page, ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 22, 2024, 9:18 PM IST

Updated : Sep 22, 2024, 9:53 PM IST

சென்னை : 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட் - இல் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற இறுதி சுற்றில் இந்திய ஆடவர் அணி ஸ்லோவேனியாவையும், மகளிர் அணி அஜர்பைஜானையும் எதிர்க்கொண்டு வெற்றி பெற்று தங்கம் பதக்கம் வென்றது. இந்திய அணி செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் முதல் முறையாக தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்ததற்கு இந்திய செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் வீடியோ மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், "செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்திய அணி மிக சிறப்பாக செயல்பட்டது. இந்திய அணி வீரர்கள் எந்த அணியுடனும் ஒப்பிட முடியாத நிலையில் இன்று விளையாடியிருந்தார்கள்.

இந்த தொடரில் ஒரு போட்டியை தவிர்த்து மற்ற அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி சிறப்பாக விளையாடியிருந்தது. குறிப்பாக, அர்ஜுன் மற்றும் குகேஷ் ஆகியோர் அணிக்கு எடுத்துக்காட்டாக விளையாடினர். இந்திய அணி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் எதிரணியானது சிறப்பாக செயல்பட்டு இருந்தது.

இந்திய செஸ் அணிக்கு விஸ்வநாதன் ஆனந்த் வாழ்த்து தெரிவிக்கும் வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க : செஸ் ஒலிம்பியாட் 2024; வரலாற்று வெற்றியை நோக்கி இந்தியா.. அமெரிக்காவை வீழ்த்தி அசத்தல்! - Chess Olympiad 2024

அதைவிட கூடுதலாக இந்திய அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை பெற்றிருந்தனர். இரண்டு வருடத்திற்கு முன்பாக தவறவிட்ட வாய்ப்பை இந்த முறை சரியாக பயன்படுத்தி தங்கப்பதக்கத்தை வென்று இருக்கிறோம்.

இந்திய அணி சிறப்பாக விளையாடி பதக்கத்தை வென்று இருப்பது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
இந்திய அணியின் மகளிர் அணியானது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த தொடரில் ஒரு தவறு செய்து இருந்தாலும் அந்த தவறு மூலமாக ஆட்டத்தை நிறுத்தாமல் தொடர்ந்து அதை எதிர்க்கொண்டு விளையாடினர்.

மகளிர் அணியின் பயிற்சியாளர் சிறப்பாக பயிற்சி கொடுத்து வழிநடத்தி வருகிறார். அவரை நாம் அனைவரும் பாராட்டியே ஆக வேண்டும்.

ஆண்கள் அணியும், மகளிரணியும் தங்கம் வென்று இருக்கிறார்கள். இரு அணிகளுக்கும் வாழ்த்துக்கள். இந்திய அணிகள் தங்க பதக்கம் வென்றிருப்பது குறித்து ஒரு இந்திய செஸ் வீரராக மிகவும் மகிழ்ச்சி அடைவேன்" என இந்தியாவின் செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்திருந்தார்.

Last Updated : Sep 22, 2024, 9:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.