ETV Bharat / entertainment

" AI தொழில்நுட்பத்தை கண்டு யாரும் பயப்பட வேண்டாம்" - இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்! - A R Rahman

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குறைந்த செலவில் படம் எடுக்கலாம்.இதனால் தொழில்நுட்பக் கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்காது என்று அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடமான (Virtual Production Studio) 'யூஸ்ட்ரீம்ஸ்' (uStream) துவக்க நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் (Photo credits - ETV Bharat Tamil nadu)

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே கவரப்பேட்டை ஐயர்கண்டிகை பகுதியில் உள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு சொந்தமான ஏஆர்ஆர் பிலிம் சிட்டியில் முழுமையான தொழில்நுட்ப மெய்நிகர் பணிகளை வழங்கும் அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தின் (Virtual Production Studio) யூஸ்ட்ரீம்ஸ் (uStream) துவக்க விழா இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தலைமையில் நடைபெற்றது. இதில், இயக்குநர்கள் மணிரத்னம், சுதா கொங்கரா உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பேசியதாவது, "ஹாலிவுட் படங்களில் பயன்படுத்தப்படும் இந்த தொழில்நுட்பம் ஆந்திரா, மும்பை ஆகிய இடங்களில் உள்ளன. இந்த புதிய தொழில்நுட்பம் யூஸ்ட்ரீம்ஸ் ஸ்டுடியோ என்ற பெயரில் சென்னையில் வந்துள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தை பார்த்து பயப்படக்கூடாது. அனைவரும் இதனை நல்ல முறையில் பயன்படுத்தி பிரம்மாண்ட படம் எடுக்க வேண்டும்.

ஏ.ஆர்.ரகுமான் பேட்டி (credits - ETV Bharat Tamil nadu)

இதையும் படிங்க: 'லப்பர் பந்து' படத்தில் விஜயகாந்த் ரெஃபரன்ஸ் வர இதுதான் காரணமா? - இயக்குநர் விளக்கம்!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குறைந்த செலவில் படம் எடுக்கலாம். யூஸ்ட்ரீம் நிறுவனத்துடன் இணைந்து விஎப்எக்ஸ் சிஜிப்ரோ, ஏஐ தொழில்நுட்பத்துடன் விர்ச்சுவல் புரொடக்ஷன் டெக்னாலஜி ஸ்டுடியோ (Virtual Production Technology Studio) தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளேன்.

ரயில் நிலையம், கோயில் போன்ற மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் வெளிப்புற படப்பிடிப்பிற்காக நீண்ட நாட்கள் அனுமதி கிடைக்காத பட்சத்தில் அங்கு ஓரிரு நாள் படப்பிடிப்பு நடத்திய பிறகு, பிரத்யேக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எஞ்சிய படப்பிடிப்பை முடித்து கொள்ளலாம். இந்த தொழிநுட்பத்தால் வேலை இழப்பு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

மனிதர்கள் செய்ய வேண்டிய வேலைகளை அவர்களை கொண்டு மட்டுமே மேற்கொள்ள வேண்டும். படப்பிடிப்பில் ஒரு பகுதி மட்டுமே இங்கு மேற்கொள்ள முடியும் . மும்பை, ஆந்திரா செல்வதற்கு பதிலாக இங்கேயே படப்பிடிப்பை நடத்தி கொள்ளலாம். சினிமா துறையில் தொழில்நுட்பக் கலைஞர்கள் வாழ்வாதாரம் பாதிக்காது” இவ்வாறு ஏ.ஆர். ரகுமான் கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.