ஆம்பன் புயல் காரணமாக தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம், அரூர் உள்ளிட்ட காவிரி கரையோரப் பகுதிகளில் கடந்த இரு தினங்களாக பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரியாற்றில் ஐந்தாயிரத்து 500 கன அடியாக உயர்ந்திருந்த நீரின் அளவு குறைந்துள்ளது.
நீர்வரத்து இரண்டாயிரம் கனஅடி சரிந்து மூன்றாயிரத்து 500 கன அடிநீராக இன்று காலை 8 மணி நிலவரப்படி கணக்கிடப்பட்டது.
நீர்வரத்து உயர்வின் காரணமாக ஒகேனக்கல் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது தண்ணீரின்றி காணப்பட்ட சீனி அருவியில் தண்ணீர் கொட்டுகிறது. ஆறு மாத இடைவெளிக்குப் பிறகு ஒகேனக்கல் ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டிவருகிறது.
ஆம்பன் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கல், காவிரிக் கரையோரப் பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக ஒகேனக்கல் பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டிருக்கும் நிலையில் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து வருவோருக்கும் தற்போது அருவியில் குளிக்க தடை நீடிக்கப்பட்டுள்ளது.
நிபந்தனைகளுடன் பரிசல்களை இயக்க வழங்கப்பட்ட அனுமதிக்கும் தற்காலிகத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : சேலத்தில் மதுக்கடையை அகற்றக்கோரி பெண்கள் போராட்டம்!