ETV Bharat / state

நான்கு மாதங்களில் ரூ. 428.62 கோடி கனிம வருவாய் - துரைமுருகன் தகவல் - சுரங்கத்துறை

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான அரசு பதவியேற்ற நான்கு மாதத்தில், ஆகஸ்ட் மாதம் வரை ரூ. 428.62 கோடி கனிம வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தகவல் தெரிவித்துள்ளார்.

Geography and Mining  District Officers  meeting on the performance of all District Officers  Durai Murugan  minister Durai Murugan  dharmapuri news  dharmapuri latest news  தர்மபுரி செய்திகள்  நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்  அமைச்சர் துரைமுருகன்  துரைமுருகன்  புவியியல்  சுரங்கத்துறை  புவியியல் மற்றும் சுரங்கத்துறை
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்
author img

By

Published : Sep 25, 2021, 9:09 AM IST

தர்மபுரி: கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், கனிமம் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில், புவியியல் மற்றும் சுரங்கத்துறையைச் சார்ந்த அனைத்து மாவட்ட அலுவலர்களின் பணிதிறன் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்துகொண்டு அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், “இந்த நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஆகஸ்டு வரையில் கனிம வருவாய் ரூ. 428.62 கோடி ஈட்டப்பட்டுள்ளது. இனி வரும் மாதங்களில் அதிக வருவாயினை அரசுக்கு ஈட்டிட நடவடிக்கை மேற்கொண்டு, கனிம வருவாயை அதிகரிக்க ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கனிமம் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்

கனிம திருட்டினை தடுக்கும் முயற்சி

அனைத்து மாவட்ட அலுவலர்களும் குறைந்தபட்சம் மாதத்திற்கு 10 வாகனங்கள் கைப்பற்றிடவும். அண்டை மாநிலங்களுக்கு அனுமதியின்றி கனிமங்களை எடுத்துச் செல்லும் கனிம வாகனங்களை முற்றிலும் தடுக்க மாவட்ட அலுவலர்கள் அதிக அளவில் வாகனங்களை கைப்பற்ற வேண்டும்.

மேலும், மண்டல பறக்கும் படையினர் முனைப்புடன் செயல்பட்டு அதிக அளவில் வாகனங்களை கைப்பற்றி கனிம திருட்டினை முற்றிலும் தடுத்து மாநில அரசுக்கு அதிக அளவில் வருவாய் ஈட்டி தர வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக, தமிழ்நாடு கனிம நிறுவனத்திற்குச் சொந்தமான, கிரானைட் ஓடுகள் மெருகேற்றும் தொழிற்சாலை செயல்பாடுகளை, அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்தார். அப்போது உணவுத்துறை அமைச்சர் திரு. சக்கரபாணி, மாவட்ட ஆட்சியர் திரு. ஜெயச்சந்திர பானு ரெட்டி உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: ‘சாதிகளை வளர்ப்பதன் மூலம் இந்து உணர்வை எழுப்பலாம் என பாஜக நினைக்கிறது’ - திருமாவளவன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.