தருமபுரி அடுத்த வெள்ளோலைப் பகுதியைச் சேர்ந்த பச்சையப்பன் என்பவரது வீட்டில், அவரது அக்கா மகள் தங்கி கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்துவருகிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரது செல்போன் தவறியுள்ளது. இதனைத் தொடர்ந்து சாலையில் கிடைத்ததாக, அந்தச் செல்போனை கல்லூரி மாணவி, தமிழ்செல்வனிடம் கொடுத்துள்ளார்.
எனினும் தமிழ்செல்வன் கல்லூரி மாணவியை அடிக்கடி செல்போன் திருடியதாகக் கூறி துன்புறுத்தி வந்துள்ளார். இது குறித்து கல்லூரி மாணவி தனது மாமா பச்சையப்பனிடம் தெரிவித்துள்ளார்.
இதில் ஏற்பட்ட தகராறில் தமிழ்ச்செல்வன் அவரது தந்தை பெரியசாமி, தாயார் லட்சுமி, சகோதரர்கள் வெற்றி, தங்கம் உள்ளிட்டோர் பச்சையப்பன் வீட்டின் கண்ணாடியை கற்களைக் கொண்டு தாக்கி உடைத்துள்ளனர். மேலும் வெளியே வந்தால் வெட்டிடுவேன் என மிரட்டி, ஆயுதங்களால் இருசக்கர வாகனத்தை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து மதிக்கோன்பாளையம் காவல் நிலையத்தில் பச்சைப்பன் அளித்த புகாரின்பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, தமிழ்செல்வனை கைதுசெய்தனா். சேதமடைந்த இருசக்கர வாகனத்தை பறிமுதல்செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள தமிழ்ச்செல்வனின் பெற்றோர், சகோதரர்களை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
கல்லூரி மாணவியின் வீட்டை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது - கல்லூரி மனைவிக்கு கொலை மிரட்டல்
தருமபுரி: செல்போனைத் திருடி விட்டதாகக் கூறி கல்லூரி மாணவியின் உறவினர் வீட்டை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்த நபரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.