ETV Bharat / state

மகளிர் உரிமைத்தொகை வருமா?.. வராதா? - எதிர்க்கட்சிகள் கேள்விக்கு பதிலடி கொடுத்த அமைச்சர்! - minister m r k panneerselvam speech

தருமபுரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கும் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பம் பதிவேற்றும் முகாமுக்கான பணிகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு செய்தார்.

Magalir Urimai Thogai
மகளிர் உரிமைத் தொகை
author img

By

Published : Jul 22, 2023, 9:59 AM IST

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் செய்தியாளர்கள் சந்திப்பு

தருமபுரி: தமிழ்நாடு முழுவதும் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்' செப்டம்பர் 15 முதல் வழங்கப்பட உள்ளது. இதற்கு வரும் 24-ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. விண்ணப்பங்கள் பதிவேற்றும் முகாமினை தருமபுரி மாவட்டம் தொப்பூரில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

இதற்காக தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் விழா ஏற்பாடுகளை ஜூலை 21 நேற்று தமிழ்நாடு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பொழுது விழா நடைபெறும் மேடை, விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்படும் அரசு பள்ளி வளாகம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த பின்னர், செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், "தமிழ்நாட்டில் முதன் முறையாக தருமபுரி மாவட்டம் தொப்பூரில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் பெறும் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் சிறப்பு முகாமை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகின்ற 24 ஆம் தேதி காலை 9 மணியளவில் (திங்கட்கிழமை) துவக்கி வைக்க வருகின்றார்.

மகளிர் உரிமைத் திட்டம் வருமா?... வராதா?... என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வந்த நிலையில், அதை பொய்யாக்கும் விதமாக தற்பொழுது இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது. கடுமையான நிதி நெருக்கடி இருந்தாலும் கூறியதை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், தற்போது இத்திட்டம் தமிழ்நாடு முழுவதும் துவங்கப்படவுள்ளது.

கடந்த 1989 ஆம் ஆண்டு மகளிர் சுய உதவி குழு குழுவை முதன் முதலாக தருமபுரி மாவட்டத்தில், அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்தார். தருமபுரியில் விதைத்த விதை, தற்போது தமிழ்நாடு முழுவதும் ஆலமரம் போல் வளர்ந்து விருட்சமாகி உள்ளது. தற்பொழுது கலைஞரின் மகன் முதல்வராகி மகளிர் உரிமைத் திட்டத்தினை நிறைவேற்றி உள்ளார். அதற்காக முதலமைச்சருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்" எனத் தெரிவித்தார்.

இந்த ஆய்வில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், திமுக மாவட்ட செயலாளர்கரும், முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன், முன்னாள் எம்எல்ஏ தடங்கம் சுப்பிரமணி உள்ளிட்ட பல்வேறு அரசு துறை அதிகாரிகள், திமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா துவக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.