ETV Bharat / state

உயிருக்குப் பாதுகாப்பு கேட்டு எஸ்.பி. அலுவலகத்தில் காதல் ஜோடி மனு - காதல் ஜோடி மனு

தருமபுரி: உயிருக்குப் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளது.

காதல் ஜோடி
காதல் ஜோடி
author img

By

Published : Oct 30, 2020, 7:21 PM IST

தருமபுரி மாவட்டம் பையர் நாயக்கன்பட்டி கிராமத்தைச் சார்ந்த மோகன் என்பவரின் மகள் முத்து மோனிகா. இவர் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்துள்ளார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, "எனது பெற்றோர் ஈரோட்டில் கட்டட கூலி வேலை செய்துவருகின்றனர். நான் ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படிக்கும் பொழுது தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் கொரங்கேரி கிராமத்தைச் சார்ந்த செல்வம் என்பவரது மகன் சிவா என்பவரை இரண்டு ஆண்டுகளாக காதலித்துவந்தேன்.

எங்களது காதல் குறித்து எனது பெற்றோரிடம் கூறியபோது சிவா வேறு ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவருடன் திருமணம் செய்துவைக்க மறுத்து விட்டு, என்னை வேறு நபருக்கு திருமணம் செய்துவைக்க முயற்சி செய்தனர்.

இதனையடுத்து நேற்று (அக்டோபர் 29) காலை 5.30 மணி அளவில், நானும் சிவாவும் கம்பைநல்லூர் பள்ளப்பட்டி கிராமத்தில் உள்ள பெருமாள் கோயிலில் திருமணம் செய்துகொண்டோம்.

இந்தத் திருமணத்தையடுத்து எனது பெற்றோர், சிவாவின் குடும்பத்திற்குத் தொடர்ந்து தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்துவருகின்றனர்.

இந்தத் திருமணம் எங்களது விருப்பப்படி நடைபெற்றது. இதில் யாரும் வற்புறுத்தவில்லை. எனது பெற்றோர் சிவாவின் குடும்பத்தை மிரட்டிவருவதால், சிவாவிற்கும் ஆபத்து நேரிடும் சூழ்நிலை உள்ளது.

எனவே மிரட்டல் விடுத்துவரும் எனது பெற்றோர் மீது நடவடிக்கை எடுத்து சிவாவிற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்" என மனுவில் முத்து மோனிகா குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.