ETV Bharat / state

3000 கிமீ ஒற்றுமை சுடர் ஓட்டம்! என்சிசி அதிகாரிக்கு உற்சாக வரவேற்பு - என்சிசி அதிகாரிக்கு உற்சாக வரவேற்பு

கன்னியாகுமரியில் இருந்து டெல்லிக்கு சுமார் 3000 கிமீ தூரம் ஒற்றுமை சுடர் ஓட்டம் செல்லும் என்சிசி அதிகாரிக்கு தர்மபுரியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

ncc 75 years  ncc  rally  ncc 75 years rally  kanyakumari to delhi  kanyakumari to delhi ncc 75 years rally  ஒற்றுமை சுடர் ஓட்டம்  சுடர் ஓட்டம்  என்சிசி  என்சிசி அதிகாரிக்கு உற்சாக வரவேற்பு  கன்னியாகுமரியில் இருந்து டெல்லிக்கு சுடர் ஓட்டம்
ஒற்றுமை சுடர் ஓட்டம்
author img

By

Published : Dec 1, 2022, 5:33 PM IST

தர்மபுரி: தேசிய மாணவர் படை ( என்சிசி ) உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆவதையொட்டி, உத்திர பிரதேசத்தை சேர்ந்த என்சிசி அதிகாரி கர்னல் கே எஸ் பதாவர், கன்னியாகுமரியில் இருந்து புதுடெல்லிக்கு சுமார் 3000 கிமீ தூரம் ஒற்றுமை சுடர் ஓட்டம் மேற்கொள்கிறார். 60 நாட்கள் தொடர் ஓட்டமாக செல்லும் கே எஸ் பதாவர், ஒற்றுமை சுடரை பிரதமர் மோடியிடம் வழங்க உள்ளார்.

கடந்த 20-ம் தேதி கன்னியாகுமரியில் ஓட்டத்தை தொடங்கிய அவர், பல்வேறு மாவட்டங்கள் வழியாக தர்மபுரிக்கு நேற்று (நவ 30) மாலை வந்தடைந்தார். அவருக்கு பெரியாம்பட்டி சப்தகிரி பொறியியல் கல்லுரியில் என்சிசி அதிகாரிகள், கல்லுரி நிர்வாகிகள் மற்றும் மாணவ, மாணவிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அவருடன் விமானப்படை அதிகாரி விங் கமாண்டர் எஸ் யுவராஜ், ஜூனியர் வாரண்ட் அதிகாரி ஜெயப்பிரகாஷ், விமானப்படை வீரர்கள், கல்லூரி என்சிசி அதிகாரி டாக்டர் சீனிவாசன் மற்றும் என்சிசி மாணவர்கள் உடன் வந்தனர்.

தர்மபுரியில் இருந்து இன்று (டிசம்பர் 1) அதிகாலை ஒற்றுமை சுடர் ஓட்டத்தை மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, துணை போலீஸ் சூப்பிரண்டு சிந்து, சப்தகிரி, பத்மாவதி, பீ ஜீ கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் எம் ஜி எஸ் வெங்கடேஸ்வரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

முன்னதாக நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் ஒற்றுமை சுடர் ஓட்டம் செல்லும் என்சிசி அதிகாரிக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர். கடும் குளிர் மற்றும் கொட்டும் பணியையும் பொருட்படுத்தாமல் என்சிசி மாணவர்கள் ஒற்றுமை சுடர் ஓட்டத்தில் ஈடுபட்டுள்ள அதிகாரிக்கு ஜெய்ஹிந்த் கரகோசத்துடன் வழி அனுப்பி வைத்தனர்.

3000 கிமீ ஒற்றுமை சுடர் ஓட்டம்

இதையும் படிங்க: world aids day: வேலூரில் கொட்டும் மழையில் மினி மாராத்தான்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.