ETV Bharat / state

தருமபுரியில் புதிதாக பொறுப்பேற்ற  காவல் கண்காணிப்பாளர் - Dharmapuri Police

தருமபுரி மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக கலைச்செல்வன் இன்று (ஜூன் 7) பொறுப்பேற்றார் .

தருமபுரி மாவட்டத்தின் 52ஆவது காவல் கண்காணிப்பாளராக கலைச்செல்வன் பொறுப்பேற்றார்

author img

By

Published : Jun 7, 2021, 5:32 PM IST

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு காவல் துறை கண்காணிப்பாளர்கள் மாற்றப்பட்டனர். தருமபுரி மாவட்டத்தில் காவல் துறை கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த பிரவேஸ்குமார் பதவி உயர்வு பெற்று தஞ்சை சரக காவல் துறை துணைத் தலைவராக நியமிக்கபட்டார்.

இதனையடுத்து சென்னை போதை பொருள் தடுப்பு குற்ற புலனாய்வுப் பிரிவு காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்துவந்த கலைச்செல்வன் (ஐபிஎஸ்) தருமபுரி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக நியமிக்கபட்டு, இன்று (ஜூன் 7) பதவி ஏற்றுக்கொண்டார்.

52ஆவது காவல் கண்காணிப்பாளர்

தருமபுரி மாவட்டத்தின் 52ஆவது காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக்கொண்ட இவர், 2012ஆம் ஆண்டு இந்திய காவல் பணியில் சேர்ந்து, திருச்சி மாவட்டம் திருவெரும்பூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளராகவும், சென்னை வண்ணாரப்பேட்டை துணை ஆணையராகவும், நீலகிரி மாவட்டம் மற்றும் சென்னை போதை பொருள் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு காவல் கண்காணிப்பளராகவும் பணிபுரிந்தார்.

தருமபுரியில் புதிதாக பொறுப்பேற்ற  காவல் கண்காணிப்பாளர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.