தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் அமைந்துள்ளது தட்சிண காசி கால பைரவர் ஆலயம். 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இத்திருத்தளத்திற்கு கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம்.
இன்று (ஜூலை.20) தேய்பிறை அஷ்டமி தினம் என்பதால் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இருந்தும் கர்நாடகா மாநிலத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
காலையிலிருந்து 64 வகையான அபிஷேகங்கள், 1008 அர்ச்சனைகள், 28 ஆகம பூஜைகள் நடந்த பின் மூலவருக்கு வெள்ளி கலசம் சார்த்தப்பட்டு ராஜ அலங்காரத்தில் கால பைரவர் பக்தர்களுக்கு விபூதி அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
இதையும் படிங்க: விதையில்லா பச்சை திராட்சையின் கொள்முதல் விலை உயர்வு - விவசாயிகள் மகிழ்ச்சி!