தருமபுரியில் அகில இந்திய எல்ஐசி ஊழியர் சங்க சேலம் கோட்ட இணைச் செயலாளர் மாதேஸ்வரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, "நாட்டின் மிகப்பெரிய நிறுவனமான எல்ஐசி 1956ஆம் ஆண்டு தொடங்கி கடந்த 64 ஆண்டுகளைக் கடந்து லாபகரமாக வெற்றிகரமாகச் செயல்பட்டுவருகிறது.
தொடங்கும்போது வெறும் 5 கோடியில் தொடங்கப்பட்டு, இன்று ரூபாய் 32 லட்சம் கோடி சொத்துகள் கொண்டு மக்களுக்கு மிகப்பெரிய அளவில் சேவை செய்து சாதனை படைத்துவருகிறது.
இப்படி பலம்வாய்ந்த, நாட்டில் வளமிக்க எல்ஐசி நிறுவனப் பங்குகளைத் தனியாருக்கு விற்பனை செய்வதைக் கைவிட வேண்டும் என எல்ஐசி ஊழியர் சங்கம் வலியுறுத்தி வருகிறது.
இதற்குச் சட்டம் இயற்றப்பட்டதால், அகில இந்திய எல்ஐசி ஊழியர்கள் சங்கத்தின் சார்பில், மத்திய அரசைக் கண்டித்து மிகப்பெரிய அளவில் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும்" எனத் தெரிவித்தார்.